சிக்குவாரா சீமான்? 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உண்மையா? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை மருத்துவமனையில் போலீசார் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

திருமண மோசடி, கருக்கலைப்பு: அதில், 2008-ல் சீமான் மதுரையில் தம்மை திருமணம் செய்து கொண்டார். 2011-ல் பணம் ,நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அத்துடன் 7 முறை சீமான் தம்மை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பது உள்ளிட்ட ஏராளமான புகார்களை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக தம்மை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பிவிடுவதற்காக இந்த புகார்கள் தெரிவிக்கப்படுவதாகவும் சீமான் விளக்கம் அளித்திருந்தார்.
விஜயலட்சுமியிடம் விசாரணை: இதனிடையே சென்னை போலீசார், விஜயலட்சுமியை வரவழைத்து சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். சீமான் மீது தெரிவித்த புகார்களுக்கான ஆதாரங்களையும் போலீசார் விஜயலட்சுமியிடம் பெற்றனர். பின்னர் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. அப்போது, சீமான் கைது செய்யப்படலாம் என தகவலும் பரவியது.
சீமான் விளாசல்: ஆனால் தமக்கு எந்த ஒரு சம்மனும் வரவில்லை என சீமான் கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் விஜயலட்சுமியை மிகவும் கடினமான வார்த்தைகளால் சீமான் விமர்சிக்கவும் செய்தார். மானங்கெட்ட ஒருத்தியோடு எப்படி சண்டையிட முடியும்? என்றும் சீமான் ஆவேசப்பட்டார்.

கட்டாய கருக்கலைப்பு உண்மைதானா?: இந்நிலையில் இன்று நடிகை விஜயலட்சுமியை போலீசார் மீண்டும் அழைத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, சீமான் தம்மை 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் கூறியிருக்கிறார். இதன் உண்மைத்தன்மைக்காக தற்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது என்றன.
சீமானுக்கு நெருக்கடி?: சென்னையில் போலீஸ் விசாரணை, நீதிமன்றத்தில் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை என விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் தொடருவதால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications