நல்ல தகப்பன் உடம்பு சரியில்லாத குழந்தை தூக்கிட்டு IPLலு போவாங்களா! அமைச்சர் சரத்துக்கு சீமான் கேள்வி
சென்னை: நல்ல தகப்பன் யாராவது உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க போவாங்களா? என அமைச்சர் சரத்குமார் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மாற்றுக் கட்சியினர், நாம் தமிழர் கட்சியில் இணைந்தது குறித்து விழாவில் சீமான் கலந்து கொண்டார். மாறுவோம் மாற்றுவோம் என்ற தலைப்பிலான இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண அமைச்சர் சரத்குமார் சென்றிருந்தார் சரி!

உடம்பு முடியாத குழந்தையை தூக்கிக் கொண்டு எந்த நல்ல தகப்பனாவது ஐபிஎல் பார்க்க போவாங்களா? ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்க தகுதியற்றவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்கள்?
மாத்திரை கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஐபிஎல் பார்க்க போயே ஆக வேண்டுமா? அப்படி என்றால் டிவியில் பார்த்திருக்கலாமே! அதை விட்டுவிட்டு குழந்தையை அங்க தூக்கிட்டு போய் கிரெடிட் கார்டில் வைத்து மாத்திரையை நசுக்குகிறார்.
தண்ணீரில் போட்டாலே மாத்திரை கரைந்து விடும், பிறகு எதற்காக நசுக்க வேண்டும்? சரி ஏதோ இதை கூட விட்டுடலாம், மாத்திரை நசுக்கும் போது கையில் எதற்கு ரூ 500 இருக்கு?
இதையெல்லாம் கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வந்துவிட்டோம். வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ 4000 மாதா மாதம் கொடுப்பேன் என்பதா?
ஆடு மாடு வளர்த்தல், நாட்டுக் கோழி வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், வேளாண்மை செய்தல், இதையெல்லாம் அரசு பணியாக மாற்றிவிட்டால் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது பெரம்பூரில் ஏன் விஜய் போட்டியிட்டார். அது போல் திருச்சி கிழக்கில் ஏன் போய் நின்றீர்கள்? பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் ஜாதி, இப்படி போட்டியிட்டுவிட்டு விஜய், ஜாதி, மதத்துக்கு எதிராக பேசி வருகிறார். நடிக்கும் போது வராத ஜோசப் , அரசியலுக்கு வந்ததும் ஏன் வந்துவிட்டது. முதல் படத்தில் அறிமுகமான போதே ஜோசப் விஜய் என போட்டுக் கொள்ள வேண்டியதானே.
சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டாரு, நான் வாங்குனா உங்களுக்கு ஏன் எரியுது! கட்சி நிதியில் ஒரு டீ கூட குடித்தது கிடையாது. நான் எப்படி அந்த காசில் கார் வாங்குவேன், என் மாப்பிள்ளை எனக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தது. அதை பார்த்து காண்டாவாதீங்க என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
