சீமான்.. திமுகவை அப்படி சொன்னதுமே.. ஆவேசத்துடன் வந்துட்டாரு.. "புரிஞ்சிட்டு பேசணும்".. யார்னு பாருங்க
சென்னை: நீட் தேர்வு ரத்து விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. திமுக இந்த விஷயத்தில் மிக தீவிரமாக களமிறங்கிய நிலையில், திமுகவை சீமான் விமர்சித்து வருகிறார்.
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அழுத்தம் தந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்: இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. நேற்று முன்தினம், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.. அத்துடன் அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திமுகவின் இந்த நிகழ்வை சிலர் வரவேற்று வருகிறார்கள். சிலர் எதிர்த்து கருத்து கூறி வருகிறார்கள்.
அப்படித்தான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கருத்து கூறியிருந்தார். நேற்று செய்தியாளர்களிடம் சீமான் பேசும்போது, "இங்கே தமிழ்நாட்டில் மருத்துவர்களின் தரம் சரியாகத்தான் இருக்கிறது.. ஆனால், மருத்துவ கட்டமைப்புகளை சரியாக செய்யவில்லை. காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு என்பதே கொண்டு வரப்பட்டது.. அதை இப்போது பாஜக பிடித்துக்கொண்டது.
திமுக நாடகம்: நீட் என்பது எப்படி சரியான மருத்துவரை உருவாக்கும் என்று கேட்டால், அதுக்கு மட்டும் இங்கே பதிலே இல்லை.. உன்னால ஒரு தேர்வைகூட ஒழுங்கா நடத்த முடியலையே? அப்பறம் எதுக்காக இந்த முறையை கொண்டு வந்திருக்கே? இதெல்லாம் திமுகவும், பாஜகவும் சேர்ந்து நடத்தி வரும் நாடகம்..
மருத்துவராக வேண்டும் என்றால், அதற்கு தேர்வு எழுதணும்.. நீதிபதிக்கு தேர்வு எழுதணும்.. வழக்கறிஞராக தேர்வு எழுதணும்.. ஆட்சியர், காவல் துறை அதிகாரி ஆகவேண்டுமானால் அதற்கும் தேர்வு எழுதணும்.. ஆனால், இவர்களையெல்லாம் கட்டுப்படுத்துகிற ஆட்சியாளர்களாகிய முதல்வர், பிரதமர் இவங்கெல்லாம் என்ன தேர்வு எழுதுகிறார்கள்? அப்படின்னா, ஆட்சிக்கு வரக்கூடியவர்களுக்கு எந்த தகுதியும் தேவையில்லையா? எந்த தேர்வும் தேவையில்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
விமர்சனம்: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தமிழக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், திமுகவை போலவே, நாம் தமிழர் கட்சியும் களமிறங்கியிருப்பது பெருத்த கவனம் பெற்று வருகிறது. அத்துடன், திமுகவை சீமான் விமர்சித்திருப்பதால், இதற்கு திமுக தலைவர்களும் பதிலடி தந்து வருகிறார்கள்.
அந்தவகையில், கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம்காலமான நிலைப்பாடு. இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பதும் திமுகவின் நிலைப்பாடுதான்.. அதனால், எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது.
அப்பட்ட பொய்: வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் போன்றவர்கள் பேச வேண்டும். எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும், இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. திமுக ஆன்மிகவாதிகளுக்கு எதிரான இயக்கம் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்" என்றார்.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் சீமான் பேசியிருந்தார்.. அப்போதும் திமுகவின் கையெழுத்து இயக்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கையெழுத்து: "தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு அமைச்சரா இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்லை காட்டியதை போல், நீட் தேர்வுக்கு முட்டையை காட்டுகிறார். தமிழக அரசு நாடகமாடி வருகிறது.. நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறது.. இதை யாரிடம் கொண்டு போய் தருவார்? மத்திய அரசிடம் தானே தருவார்கள்? அப்போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications