Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மாதத்தில் முதலாளியை மாற்றிய சீமான்! விஜய் தான் டார்கெட்? 2026ல் நாதக காலி.. உடைத்து பேசிய பிரபலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவுக்கு எதிராக அரசியல் போரை அறிவித்துள்ள சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தொண்டர்களை கடுமையாக சாடி பேசி உள்ளார். இந்நிலையில், திராவிடனா? தமிழனா? என்று வாள் வீசிக்கொண்டிருந்த சீமான்.. ஸ்டாலினை சந்தித்த பிறகு சித்தாந்தமா? சினிமாவா? என விஜய்க்கு கொம்பு சுற்றுகிறார் எனவும், 2026 தேர்தலுக்கு பிறகு காணாமல் போகவிருக்கும் கட்சிகளில் நாம் தமிழரும் ஒன்று என கூறியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து மாறி மாறி பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். கடந்த காலங்களில் எனது தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என பேசினார்.

விஜய் அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்புகளிலும் நாம் தமிழர் பொதுக் கூட்டங்களிலும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் அறிவித்ததில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் விஜய் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

Seeman Vijay Blue Sattai Maaran

இந்த நிலையில் விஜய்க்கு எதிராக அரசியல் போரை அறிவித்திருக்கிறார் சீமான். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், சிலர் ரசிகர் கூட்டத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள். நாம் இலட்சிய கூட்டத்தை உருவாக்குகிறோம். சித்தாந்தமா? சினிமாவா? என்று பார்த்தால் சித்தாந்தம் தான் பெரியது. இனிமே பாவம் பார்க்க கூடாது. சித்தப்பா மகனாக இருந்தாலும், பெரியப்பா மகனாக இருந்தாலும் அடிதான்.. இனி பாவமே பார்க்கக்கூடாது என தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடி பேசினார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக அரசியல் போர் துவங்கி விட்டதாகவும் சீமான் பேசு இருந்தார்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசிய சீமான்," நேற்று வந்தவனுக்கெல்லாம் இசட், ஒய் பிரிவு பாதுகாப்பு என்கிறார்கள். என்ன செய்து விட்டார்கள். முதலமைச்சரா? பிரதமரா? எதற்கு பாதுகாப்பு என விஜய்யை குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் திமுக தூண்டுதலின் பேரிலேயே விஜய் சீமான் விமர்சிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர்.

இந்நிலையில், 2026 தேர்தலுக்கு பிறகு காணாமல் போகவிருக்கும் கட்சிகளில் நாம் தமிழரும் ஒன்று என கூறியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"திராவிடமா? தமிழ்தேசியமா? திராவிடனா? தமிழனா? என்று வாள் வீசிக்கொண்டிருந்த ஶ்ரீமான்.. ஸ்டாலினை சந்தித்த பிறகு சித்தாந்தமா? சினிமாவா? என விஜய்க்கு கொம்பு சுற்றுகிறார்.

இதற்கு முன்பு ரஜினியை சந்தித்துவிட்டு வந்தபிறகு.. பெரியாரை பிடித்து பிராண்டிக்கொண்டு இருந்தார். தனது எஜமானர்களையும், எதிரிகளையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றும் வல்லமை கொண்டவர் இவர் மட்டும்தான்.

தன்னை வாழ்த்தினாலும், தூற்றினாலும்..‌ இவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் விஜய். அதேபோல‌ மக்களும் கண்டுகொள்வதில்லை. 2026 தேர்தலுக்கு பிறகு காணாமல் போகவிருக்கும் கட்சிகளில் இதுவும் ஒன்று. சித்தாந்தமா? சினிமாவா? என கூறுபவர் LIK படத்தில் ப்ரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்து வருகிறார். நல்லா இருக்கு நியாயம்." என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில்," இத்தனை நாட்கள் திமுகவை தனது எதிரியாக கூறிக்கொண்டிருந்தார். இப்போது விஜய்க்கு எதிராக பாய்கிறார். தவெகவின் முதல் மாநாடு முடிந்தபிறகு.. ரோட்டு நடுவுல நின்னா அடிபட்டு சாவ என‌ சாபம் விட்டார். எரோடு இடைத்தேர்தல் சமயத்தில் நாதகவின் பல இளைஞர்கள் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு போய் விட்டனர். அந்த பதற்றத்தில் மீண்டும் 'விஜய் என் தம்பி' என பேசி வந்தார்.

தற்போது ஸ்டாலினை சந்தித்த பிறகு.. விஜய்யிடம் மோதப்போவதாக சொல்கிறார். இதுதான் அந்த சந்திப்பில் தரப்பட்ட அசைன்மென்ட் போல. நித்தம் ஒரு நிறம். நித்தம் ஒரு பேச்சு. ஆளும் திமுகவைவிட.. தவெகதான் முக்கிய எதிரி எனும் இந்நாடகம் மக்களிடம் எடுபடாது‌" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+