முகிலனை உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்
சென்னை: சமூகச் செயற்பாட்டாளர் முகிலனை மீட்டு உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் போராட்டங்களங்களில் அயராது பங்கேற்று வந்த சமூகச் செயற்பாட்டாளர் சகோதரர் முகிலன் அவர்கள் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்றப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு தொடர்பான காணொளி ஆதாரத்தினைச் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட பிப்ரவரி 15 அன்று முதல் காணாமல் போனார்.
அவரைக் கண்டுபிடித்துத் தரக் கோரி தமிழகமெங்கும் அடையாளப் போராட்டங்களும், ஆட்கொணர்வு மனுவின் வாயிலாக சட்டப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட வேளையில், தற்போது வெளியாகியிருக்கிற காணொளியின் மூலம் அவர் ஆந்திரக்காவல்துறையின் வசமிருப்பது உறுதியாகியிருக்கிறது.
எனவே, சகோதரர் முகிலனை விரைவாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பும் அளித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications