உருவாகும் அதிமுக - நாம் தமிழர் கூட்டணி? வெளிப்படையாக ஆதரவு கேட்ட சீமான்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
சென்னை: நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன் என்று அதிமுகவிடம் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவிற்கு அடுத்த டெஸ்ட்டாக விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.

வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21 முடிந்துவிட்டது.
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26 இன்றோடு கடைசி நாள்
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13
மும்முனை போட்டி: இங்கே பாமக, நாம் தமிழர், திமுக போட்டியிடுகிறது. மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.
2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.
நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை.
அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவு எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2026ல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அப்போது அரசியல் எப்படி மாறும் என்று பார்க்கலாம். இது சாதாரண இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என்று சீமான் வெளிப்படையாக கேட்டுள்ளார்.
அதிமுக புறக்கணிப்பு: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் . பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.
இப்படித்த நிலையில் சீமான் அதிமுக ஆதரவை கேட்டு இருப்பது 2026ல் அதிமுக - நாம் தமிழர் கூட்டணிக்கு அடித்தளமாக அமையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications