சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களை குழப்புகிறது.. கருத்து கணிப்புகளை தடை செய்யணும்.. பொங்கியெழுந்த சீமான்!

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை தனக்கு சாதமாக பயன்படுத்தி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இரவு நேரம்.. இளம் பெண்ணை வாட்ச் செய்து.. பின்னாடியே விரட்டிய இளைஞர்.. மிரண்ட மயிலாடுதுறை இரவு நேரம்.. இளம் பெண்ணை வாட்ச் செய்து.. பின்னாடியே விரட்டிய இளைஞர்.. மிரண்ட மயிலாடுதுறை

தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் குடிமனை பட்டா கூட வழங்கவில்லை. அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் சீமான் தெரிவித்தார்.

சீமான் கண்டனம்

சீமான் கண்டனம்

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஒருபுறமிருக்க வருமான வரித்துறை சோதனையும் மறுபுறம் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகின்றனர்

எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகின்றனர்

இது தொடர்பாக எர்ணாவூரில் நிருபர்களிடம் பேட்டியளித்த சீமான் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை தனக்கு சாதமாக பயன்படுத்தி வருகிறார். தன்னை எதிர்ப்பவர்களை இந்த அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறார். தோல்விக்கு பயந்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த கடைசி ஆயுதமாக வருமான வரித்துறை சோதனை பயன்படுத்துகின்றனர். என் வீட்டில் ஒரு முறையாவது வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என்று சீமான் சவால் விடுத்தார்.

அகதிகளாக வாழ்கிறோம்

அகதிகளாக வாழ்கிறோம்

தொடர்ந்து பேசிய சீமான் கூறியதாவது:- கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். ஆனால் சென்னை முழுவதுமே சாலையில் கழிவு நீர் பிரச்சனை. எங்கும் குடிநீர் வசதி இல்லை. தலைநகரே இப்படி என்றால் திருவொற்றியூர் மட்டும் என்ன விதிவிலக்கா. ஆட்சி செய்தவர்கள் குடிமனை பட்டா கூட வழங்கவில்லை. அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும்

கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும்

என் நாடு என் உரிமை. நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன். நான் அமெரிக்காவிலிருந்து வந்து திருவொற்றியூரில் போட்டியிடவில்லை. வெற்று அறிவிப்புகளாக இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அதிகமாக வரும் கருத்து கணிப்புகள் மக்களை குழப்புகிறது. தேர்தல் இது வியாபாரமாகி விட்டது. எனவே தேர்தல் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று சீமான் கூறினார்.

English summary
Seeman, the chief co-ordinator of the Naam Tamil Party, has said that Prime Minister Modi is taking advantage of institutions including the Income Tax Department and the Enforcement Department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X