மலை மாடுகளோடு நைக் ஷூவுடன் மலையேறிய சீமான்! தேனியில் நாம் தமிழர் செய்த சம்பவம்! சொன்னதை செஞ்சிட்டாரே
தேனி: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தோடு தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நாட்டு இன மாடுகளோடு மலை மேல் சென்ற சீமான் தடையை மீறி அவற்றை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றார். இதனால் போலீசார் நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாடுகளுக்கு முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது மாநாட்டில் பேசியிருந்த சீமான் தடையை மீறி மலைப்பகுதியில் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன் என கூறி இருந்தார்.

வனப்பகுதிக்குள் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை நாட்டு இன மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி செல்லும் சாலையில் சுமார் 1000 நாட்டு இன மாடுகளை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து சென்று வனத்துறையினர் அனுமதியை மீறி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
அப்போது சீமானை வனத்துறை அலுவலர் நாகராஜன், அன்பரசன் உள்ளிட்ட வனத்துறையினர் தடுத்து மலை மேல் மாடுகளை ஏற்றி செல்ல மறுத்தனர. இதனால் சீமான், வனத்துறை அலுவலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து தடையை மீறி சீமான் விவசாயிகளுடன் 1000 நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதனால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறுகையில்," எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் தடை செய்தால் மீண்டும் மாடுகளை மலை மேல் ஏற்றி போராட்டம் நடத்துவோம். மாடுகளை மலை மேல் ஏற்றி செல் தடை என அறிவித்துள்ளீர்கள் அதற்கு மாற்று இடம் ஏன் அறிவிக்கவில்லை. எத்தனை ஆண்டுகளாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறோம். திடீரென்று வனவிலங்குகள் மீது உங்களுக்கு அக்கறை வந்தால் நாங்கள் எங்கள் மாடுகளை எங்கே சென்று மேய்ப்பது.
வெடிகளை வைத்து மலைகளை தகர்க்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குகள், எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா? கால்நடைத்துறை ஒன்று இருக்கிறது. அதற்கு அமைச்சர் என்றும் இவர் இருக்கிறார். ஆனால் மாடுகளை பாதுகாப்பதில்லை" என்று தெரிவித்தார்.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications