வீடு தேடி சென்றும் ஏற்காத தலைவர்கள்.. சோகத்தில் இருக்கும் சீமான்.. நாதகவின் அடுத்த திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் தன்னை எந்தக் கட்சியும் பொது வேட்பாளராக ஏற்க முன் வரவில்லை என்பதால் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சோகத்தில் உள்ளார். ஒரு சில தலைவர்களின் வீடு தேடி சென்ற போதும் கூட, அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்று நாதக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். சீமான் வேட்பாளராக அறிவித்து கொண்ட நாள் முதலே, அவர் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவருமே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. பின்னர் பேசலாம் என்று பதில் அளித்து நகர்ந்து சென்றனர்.

Seeman

அதேபோல் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்பேன் என்று சீமான் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இதனால் நாதகவினர் குழப்பம் அடைந்தனர். ஏற்கனவே பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக உடன் பேசிவிட்டாரா சீமான் என்று சந்தேகம் அடைந்தனர். ஆனால் சீமான் வேட்பாளராக தன்னை அறிவித்த பின் தான், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்.

ஒரு சில தலைவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கூட ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் சீமானுக்கு ஆதரவு என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு லாபம் இல்லாமல் நாதகவை ஆதரிக்காது என்பது தெரிந்துவிட்டது. இதனால் சமூக தலைவர்களின் ஆதரவை சீமான் நாடி இருக்கிறார்.

ஏற்கனவே ராக்கெட் ராஜாவிடம் தனக்காக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளார். இருப்பினும் முக்குலத்தோர் வாக்குகளை எப்படி நாதக பக்கம் திருப்புவது என்பது புரியாமல் சீமான் தவித்து வந்தார். இதனிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சீமான் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. அண்மையில் சரத்குமார் பிறந்தநாள் விழாவில் நயினார் நாகேந்திரனுடன் சீமான் நெருக்கம் காட்டினார்.

அதேபோல் பாஜகவையும் பெரிதாக வம்புக்கு இழுக்காமல், முழுக்க முழுக்க தவெக மற்றும் விஜய்யை மட்டுமே நாதக அட்டாக் செய்து வருகிறது. இதனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு எப்படி பாஜக ஆதரவு அளித்ததோ, அதே பாணியில் அம்பை தொகுதியிலும் ஆதரவு அளிக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் நயினார் நாகேந்திரனின் ஆதரவு சீமானுக்கு வாக்காக கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+