Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தார்த்துக்கும் தண்ணி பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? "காவிரி"யால் பொங்கி இறங்கியடிக்கிறார் சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியும் கோதாவில் குதித்துள்ளது.. ஒருபக்கம் திமுக, இன்னொரு பக்கம் பாஜக என இரு தரப்பையும் கண்டித்து, இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த போகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், தண்ணீர் தர மறுப்பது கர்நாடகத்தின் சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும்.. தமிழக முதல்வருக்கு இறுதிச்சடங்குகள் செய்து அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது..

தமிழ்நாட்டின் முதலமைச்சர், எட்டுக் கோடி தமிழ் மக்களின் அரசப் பிரதிநிதியாவார். எனவே, தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பதிலுக்கு கர்நாடக முதலமைச்சரை அவமதிக்க ஒரு நொடி ஆகாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீரப்பையே செயல்படுத்த முடியவில்லை என்றால் இதுதான் இந்தியாவின் ஒருமைப்பாடா?

Seeman Major Move and Naam Tamizhar Party demonstration today: Cauvery Water Issue

தமிழர்கள்: தன்னிச்சை அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தைக்கூட முறையாகச் சட்டப்படி இயங்கச் செய்து நீரினை பெற்றுத்தர முடியவில்லை என்றால், ஒன்றிய அரசு என்ற ஒன்று இந்த நாட்டுக்கு எதற்கு? இதுதான் இந்தியாவின் கூட்டாட்சி முறையா? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பாஜக ஒரே நாட்டுக்குள் இருக்கும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்? தேசிய ஒருமைப்பாடு பேசும் காங்கிரஸ் கட்சி பெற்றுத்தருமா? கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமையப் பாடுபட்ட திமுக சித்தரமையா அரசிடம் பேசி காவிரிநீரைப் பெற்றுத்தருமா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழக உரிமைகள்: இதற்கு பிறகு சீமான், கர்நாடக மாநிலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் சீமான்..

அந்தவகையில், செப்டம்பர் 30ம் தேதி அதாவது இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்க உள்ளது..

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த போராட்டத்தினை பேரெழுச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டதால், அதற்கான பணிகளில் சீமானின் தம்பிகள் ஆயத்தமாகிவிட்டார்கள்..
எதிர்பார்ப்பு: தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தும் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டை ஆளும் திறனற்ற திமுக அரசு , இந்த இரண்டு அரசுகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்படஉள்ளதால், இதற்கு திமுக, பாஜக எப்படி ரியாக்ட் செய்ய போகிறது என்று தெரியவில்லை.. அதைவிட முக்கியமாக, வரப்போகும் தேர்தலில் சீமான் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ள நிலையில், இன்று நடத்தும் இந்த போராட்டம், தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த சீமான், 'காவிரி விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பேசி ஒரு தீர்வு காண வேண்டும். ஒரு கலைஞனிடம் கேட்பது என்ன நியாயம்? இது மாதிரி கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டு பகுதி வெளிவந்தது.

சித்தார்த்: அதற்கு தமிழகத்தில் நாம் எந்த தொந்தரவும் வரவேற்பு தான் வழங்கினோம்.. ஆனால், அவர்கள் விஜய் படத்தையோ மற்ற நம்முடைய நடிகர்கள் படத்தையோ திரையிட விடுவதே கிடையாது.. நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன். அவருக்கும், தண்ணீர் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஒரு நடிகரிடம் எப்படி இது போல் கேள்வி கேட்க முடியும்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+