"ஆட்சி சரியா இருக்கு.. வேகமா இயங்குறாங்க... மா.சு செம சிறப்பு..".. சீமானின் வேற லெவல் பாராட்டு!
முதல்வர் ஸ்டாலினை சீமான் இன்று நேரில் சந்தித்து பேசினார்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்து பேசினர்... சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முதல்வரிடம் வலியுறுத்தியதாக சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசினார்..
அப்போது கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

நிவாரண நிதி
இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களும் தனது சார்பில் ரூபாய் 5 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்... இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் முதல்வரிடம் பேசியதாக தெரிகிறது.. முதல்வர் -சீமான் சந்திப்பு விவரம் குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

அறிக்கை
முதல்வருடனான இந்த சந்திப்பின்போது 161வது, சட்டப்பிரிவின்படி அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலையை சாத்தியப்படுத்தவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் சீமான் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்.

வகுப்பு
மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்து ஒரு வரையறைக்குள் கொண்டுவரவேண்டும் எனவும், தேர்வுகளைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டி, கொரோனா பரவல் குறையும்வரை 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ஒத்திக்வைக்கவேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்தார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு
முதல்வரை சந்தித்துவிட்டு, வெளியே வந்த சீமான், செய்தியாளர்களிடம் பேசியபோது, "முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்... கொரோன தடுப்பு பணிகளை சிறப்பாக கையாள்கிறார்.. ஆட்சி சரியா இருக்கு.. நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத்துறையில அண்ணன் மா.சு சிறப்பா இயங்குறாரு" என்று புகழாரம் சூட்டினார் சீமான்.












Click it and Unblock the Notifications