வாக்களிக்காமல் இருப்பதும் தேச விரோத குற்றமே.. 1 வாக்கால் என்ன மாறப்போகுதுனு நினைக்காதீங்க.. சீமான்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதும் தேச விரோத குற்றம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வாக்களித்த சீமான், ஒவ்வொரு வாக்கும் மாற்றத்திற்கானது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மணி முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருந்தனர்.

கோடை வெப்பம் காரணமாக காலையிலேயே வாக்களிக்க ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் குவிந்து வருகின்றனர். இந்த சட்டசபைத் தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். இதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜனநாயகத்தின் கடைசி ஆயுதம் வாக்கு. வருமான வரி ஏய்ப்பு, கொலை, திருட்டு, தீவிரவாதம் உள்ளிட்டவை மட்டுமல்ல.. வாக்களிக்காமல் இருப்பதும் தேச விரோத குற்றம்தான்.
கற்றவர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். சிலர் நமது ஒரு வாக்கால் என்ன நடக்க போகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வாக்கில் இருந்தும் தான் மாற்றம் வரும். அதனை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது நிர்வாக சீர்கேடு. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க தமிழ்நாடு வரும் பலரின் முடிவை வரவேற்கிறேன். காவலர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு எப்படி தபால் வாக்கு அளிக்கும் வசதி அளிக்கப்படுகிறதோ, அதுபோல் வெளிநாடுகளில் இருக்கும் அனைவருக்கும் தபால் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications