நாதக தோல்வி.. சைலண்ட் மோடில் சீமான்.. கூட்டணி போட்டு இடைத்தேர்தலை சந்திக்க விரும்பும் தம்பிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். நாதக வாக்கு சதவிகிதம் குறைந்ததோடு, டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்ததை அக்கட்சியினரால் ஏற்க முடியவில்லை. இதனால் இடைத்தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து நாதகவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும் என்று தம்பிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள சூழலில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் களத்தில் 'சைலண்ட் மோடுக்கு' சென்றுவிட்டார். தொடர்ந்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தங்களது வாக்கு சதவிகிதத்தை படிப்படியாக உயர்த்தி வந்த நாம் தமிழர் கட்சி, இந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

Seeman

லோக்சபா தேர்தலில் 8.1 சதவிகிதம் வாக்குகளை பெற்ற நாதக, இந்த சட்டசபைத் தேர்தலில் 3.9 சதவிகிதமாக குறைந்துவிட்டது. சீமான் உட்பட நாதக சார்பாக போட்டியிட்ட யாருமே டெபாசிட் வாங்கவில்லை. நாதக வெற்றி பெறும் என்று நம்பி இரவு பகலாகக் களப்பணியாற்றிய கட்சியின் தம்பிகள் இந்த படுதோல்வியை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

கட்சியின் இந்த திடீர் வீழ்ச்சி நாதக நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சில மாவட்ட நிர்வாகிகள் தவெக நோக்கி நகர ஆயத்தமாகி வருகின்றனர். 3 சட்டசபைத் தேர்தல்களில் தனித்து களம் கண்ட நாதக, இதுவரை ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை. நாதகவால் இதுவரை ஒரு எம்எல்ஏ-வை கூட உருவாக்க முடியவில்லை.

இதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அறிந்து உள்ளனர். நாம் தமிழர் கட்சியை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டுமானால், தற்போதைய அரசியல் வியூகத்தை மாற்றியாக வேண்டும் என்ற முணுமுணுப்பு கட்சிக்குள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எப்போதும் தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் செலவுகளை ஈடுகட்ட முடிவதில்லை.

அதேபோல் வாக்குகள் சிதறி வெற்றி வாய்ப்பும் கைநழுவிப் போகிறது. இதனால், வரவிருக்கும் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முதற்கொண்டு, இனிவரும் தேர்தல்களில் திமுக போன்ற பலமான ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் தம்பிகள் பேசத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக சீமானை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பதே நாதகவின் ஆசையாக உள்ளது.

இதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக தன்னை நிறுத்துங்கள் என்று அத்தனை எதிர்க்கட்சிகளிடமும் சீமான் பேசி வருகிறார். திமுகவிடம் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலமாக பேசி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கூட்டணி போகும் முடிவை சீமான் இதுவரை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தம்பிகளும் சோகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+