சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"துணை முதல்வர் உதயநிதி".. ஆஹா.. சீமானே சொல்லிட்டாரே.. பறந்து வந்த வாழ்த்து.. குஷியில் உடன்பிறப்புகள்

துணை முதல்வர் பதவியும் உதயநிதிக்கு கிடைக்கலாம் என்று சீமான் ஆரூடம் சொல்லி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, எதிர்பார்த்த ஒன்றுதான், அவருக்கு விரைவில் துணை முதல்வர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாஜகவை போலவே திமுகவையும் சரமாரி விமர்சித்து வருபவர் சீமான்.. ஆனால், சமீபத்தில் வாரிசு திரைப்படம் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது..

உதயநிதி ஸ்டாலின் தான், வாரிசு திரைப்படத்தை தடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருந்தார்.. இதற்கு முதலில் வந்து மறுப்பு சொன்னது சீமான்தான்..

பாய் அஸ்ஸலாமு அலைக்கும்! பிரியாணி சூப்பரா இருந்துச்சு! மாஸ்டரை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்!'

 வாரிசு சப்போர்ட்

வாரிசு சப்போர்ட்

விஜய்யின் படம் உரிய நேரத்தில் வரும், அதை தடுக்கமாட்டோம் என்று எனக்கு உறுதியளித்துள்ளனர். அப்படி படம் வெளியிடாவிட்டால், நான் இறங்கி போராடுவேன்... ஆனால், அதை தடுப்பது உதயநிதி என்று சொல்வதை ஏற்க முடியாது.. தம்பி உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை.. உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுபோல் எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்" என்று திடமாக சீமான் கூறியிருந்தார்.. விஜய்க்கு ஆதரவாக சீமான் பேசினாலும், மற்றொருபுறம் உதயநிதிக்கு சப்போர்ட் செய்து பேசியது அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.

 3 வது மாடி

3 வது மாடி

இந்நிலையில், நாளைய தினம் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.. கடந்த 4 நாட்களுக்கு முன்பேயே, தலைமை செயலகத்தில் உதயநிதிக்காக அறைகள் ஒதுக்கப்பட்டு,அதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 தினங்களாக தயாரானதாக சொல்லப்பட்டது.. தலைமை செயலகத்தில் அமைச்சர்களுக்கு தரை தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடிகளில் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு இலாகா வாரியாக அமைச்சர்கள் அந்த அறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

 பூந்தமல்லி சீமான்

பூந்தமல்லி சீமான்

உதயநிதிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.. அந்தவகையில் சீமானும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. பூவிருந்தவல்லியில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றதில், கலந்துகொண்ட சீமான், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், "மற்ற மொழிகளை கற்பதை ஒருபோதும் நான் எதிர்க்கவில்லை... மொழிகளை திணிப்பதை மட்டுமேதான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன்..

 துணை முதல்வர்

துணை முதல்வர்

முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு? இட ஒதுக்கீடு வேண்டும் என்றால், அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும்" என்றார். அப்போது செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதில் அளித்து பேசிய சீமான், "உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. சொல்லப்போனால் இது எதிர்பார்த்த ஒரு முடிவுதான்.. இன்னும் சொல்ல போனால் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என்று சீமான் பதிலளித்தார்.

English summary
Seeman predicts Udhayanidhi as soon as become a deputy chief minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X