பாய் அஸ்ஸலாமு அலைக்கும்! பிரியாணி சூப்பரா இருந்துச்சு! மாஸ்டரை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியாணி மாஸ்டரை அழைத்து சுவை குறித்து பாராட்டிய நடிகர் விஜய் அவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என சலாமும் போட்டிருக்கிறார்.

இதனால் நெகிழ்ந்து போன பிரியாணி மாஸ்டர் முகமது இப்ராஹீம், தன்னையும் மதித்து தன்னை அழைத்து விஜய் பாராட்டுவார் என எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளாக விஜய் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தாம் தான் பிரியாணி சமைத்து வருவதாகவும் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.

 விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசிய நடிகர் விஜய், அவர்களுக்கு சுடச்சுட பிரியாணியும் வழங்கினார். இந்த பிரியாணியை தாமும் சாப்பிட்டுப் பார்த்த நடிகர் விஜய், சமையல் செய்யும் இடத்துக்கே நேரடியாக சென்று அங்கு நின்று கொண்டிருந்த பிரியாணி மாஸ்டர் இப்ராஹிமை அழைத்து மனதார பாராட்டியுள்ளார். மேலும், அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எனக் கூறி சலாமும் போட்டிருக்கிறார்.

பிரியாணி மாஸ்டர்

பிரியாணி மாஸ்டர்

இதனால் நெகிழ்ந்து போன பிரியாணி மாஸ்டர் இப்ராஹிம் இது குறித்து கூறும் போது, இன்று சமைத்த பிரியாணி நல்ல சுவையாக, ஃபைனாக இருந்தது என விஜய் பாராட்டினார் என்றும் இன்று 800 பேருக்கு பிரியாணி செய்து கொடுத்ததாகவும் தன்னுடன் 3 பேரை பிரியாணி சமைக்க அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். தனது பிரியாணி என்றால் நடிகர் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கடந்த 8 ஆண்டுகளாக தாம் தான் விஜய் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரியாணி சமைத்து வருவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும்

பிரியாணி நன்றாக இருந்தால் அதை பாராட்டும் விஜய், நன்றாக இல்லையென்றால் உடனே அழைத்து இன்று கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருந்தது பாய், அடுத்த தடவை அதை சரி செய்து டேஸ்டா கொடுங்க என கூறுவார் எனவும் பிரியாணி மாஸ்டர் இப்ராஹிம் கூறினார். விஜய் பல்லாண்டு காலம் நல்லாயிருக்க வேண்டும் என வாழ்த்திய பிரியாணி மாஸ்டர் இப்ராஹிம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இல்ல விழாக்களிலும் சமைத்துக் கொடுத்து வருகிறார்.

 ரசிகர்கள்

ரசிகர்கள்

சுடச்சுட பிரியாணி, ஆனியன் ரைத்தா, என ஒரு பிடி பிடித்த விஜய் ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் மறக்காமல் பிரியாணி மாஸ்டர் இப்ராஹிமை பாராட்டிவிட்டு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+