Rs.8000 Coupon: ரூ 8000 கூப்பனுக்கு முதல்வர் பதவி தருவீங்களா ஸ்டாலின்? சீமான் கலகல கேள்வி
சென்னை: திமுக தரும் ரூ 8000 கூப்பனை வைத்து என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால் முதல்வர் பதவியை கொடுப்பீங்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் வழக்கம் போல் தனித்து போட்டியிடுகிறது. 117 பெண்கள், 117 ஆண்கள் என வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள். சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், அனைத்து மதங்களுமே மது குடிப்பது பாவம் என கூறினாலும் அரசே விற்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட பிறகும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ 1000 தருகிறார்கள்.
அப்படியென்றால் ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் திமுக- அதிமுக ஆட்சியாளர்கள், மக்களை வறுமையில் வைத்துள்ளனர். இப்போது 5 ஆண்டுகள் ஆட்சிக்கு பின்னர், 2000 ரூபாய் கொடுக்கிறோம் என்றால் வறுமை வளர்ந்து விட்டது என்பதுதான் அர்த்தம்.
அவர்கள் அறிவிக்கும் 2000 ரூபாய், 2500 ரூபாய், 8000 ரூபாய் கூப்பன், 10 ஆயிரம் ரூபாய் வறுமை ஒழிப்புத் தொகை போன்றவற்றை எங்கிருந்து தருவார் என்ற கேள்வி எழாத வரை மாற்றம் ஏற்படாது.
இலவசங்கள் அறிவித்தால்தான் ஓட்டு என்றால் "கால் கிலோ தங்கம், கார், அதற்கு பெட்ரோல், ஊதியத்துடன் டிரைவர்" என நான் சொன்னால் ஏற்பீர்களா? அப்படி கொடுத்தால் உங்களுக்கு படிப்பு, தகுதியெல்லாம் எதற்கு?
திமுக தரும் ரூ 8000 கூப்பனை வைத்து என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால் முதல்வர் பதவியை கொடுப்பீர்களா? பைத்திங்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம். உதயசூரியனுக்கு போடுங்கள், ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும், நாடு சுடுகாடாக மாறட்டும்.
இதற்கு முன்னர், 2 வயது குழந்தையை தான் பலாத்காரம் செய்தனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெளியே வந்தவுடன் நாசம் செய்து விடுவார்கள். நல்லாட்சி அமைய, சிந்தித்து ஓட்டு போட்டுங்கள், இல்லையென்றால் குவார்ட்டர் குடித்துவிட்டு வீட்டில் படுத்திருங்கள்
அரை சதவீதம் ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட கூட்டணி பேரம் நடத்தியவர்கள், என்னிடம் எப்படியெல்லாம் பேரம் பேசியிருப்பர்? நேற்று கூட கூட்டணி பேச்சு நடந்தது. "குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள், அங்கிருந்து நாங்கள வாபஸ் பெறுகிறோம். அது போல் மற்ற தொகுதிகளில் நீங்கள் வாபஸ் பெறுங்கள்" என கேட்டனர். நான் நிராகரித்து விட்டேன். இவ்வாறு சீமான் பேசியிருந்தார்.
8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சிஸ மைக்ரோவேவ் ஓவன், மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருப்பதாக ஸ்டாலின் கூறி வருகையில் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications