Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடிபோல் லெகின்ஸ் போடனுமா? ரூபாயில் காந்தி படம் கூடாது.. ஆளுநர் டூ கெஜ்ரிவால் -சீமானுக்கு வந்த கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை கட்டமைத்தது வெள்ளைக்காரர்கள்தான் என்றும் ரிஷிகள் இல்லை எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா என்னும் நாடு ரிஷிகளாலும், ஆன்மீகத்தாலும், சனாதானத்தாலும் உருவாக்கப்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான், "வெள்ளைக்காரன் என்ன ரிஷியா? அவனோட ஆன்மீகம் என்ன? உளறிக்கொண்டு இருக்கக்கூடாது. ஒன்றுமே தெரியாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார். இவரை எப்படி ஆளுநர் ஆக்கினார்கள்.

வெள்ளையர்கள் உருவாக்கிய இந்தியா

வெள்ளையர்கள் உருவாக்கிய இந்தியா

இந்த நாடு பல பாளையங்களாக, 600க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தது. அதை வெள்ளைக்காரன் போரிட்டு என் பாட்டன் பூலித்தேவனை, தீரன் சின்னமலையை, வேலு நாச்சியாரை, திப்பு சுல்தானை, அழகு முத்துக்கோனை வீழ்த்தி நிர்வாக வசதிக்காக ஒரு நாடாக்கி இந்தியா என பெயர் வைத்தான்.

மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

இதில் எங்கு ரிஷி இருந்தான். நாடு கட்டுவதுதான் ரிஷியின் வேலையா? நிலம், மண்ணாசை, பெண்ணாசை அனைத்தையும் துறந்து செல்பவர்தான் ரிஷி. பைத்தியக்காரன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு சென்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார். ஆளுநரை வைத்து இரட்டை ஆட்சி முறையை பாஜக நடத்துகிறது என்று சொல்கிறார்.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு எதிர்ப்பு

என்.ஐ.ஏ. விசாரணைக்கு எதிர்ப்பு

ஆனால், இங்கு பெரிய காவல்துறை, உளவுத்துறை, கியூ பிரிவு, சிபிசிஐடி என அனைத்தையும் வைத்துக் கொண்டு எதற்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு அனுப்பினீர்கள். அது மாநில உரிமையை பறிக்கும் செயல் இல்லையா? கல்வி உரிமையை பறிகொடுத்தீர்கள், மருத்துவ உரிமையை பறிகொடுத்தீர்கள், மின் உற்பத்தி விநியோகத்தை கொடுத்தீர்கள். ஏதாவது மாநிலத்துக்கு அதிகாரம் இருக்கா?

ஒரே நாடு, ஒரே மதம்

ஒரே நாடு, ஒரே மதம்


காவல்துறை காவி மயமாகிவிட்டதாக பலர் தெரிவிக்கிறார்கள். இவர்கள் காவல்துறை திமுக மயமாகிவிட்டதாக கூறுகிறார்கள். இதில் நாம் எதை ஏற்பது? ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம் என்று கொண்டு வருவதற்கான திட்டம் நடக்கிறது. இது பல மொழிகளை பேசக்கூடிய தேசிய இனங்களில் வசிக்கக்கூடிய ஒன்றியம்.

பேராபத்து

பேராபத்து

இதை புரியாமல் ஆட்சியாளர்கள் திரும்பத்திரும்ப இதை செய்வது பேராபத்தில் கொண்டுபோய் நிறுத்தும். நாட்டில் ஒருமைப்பாட்டுக்கு கூறுபோடுவது இவர்கள்தான் என்றும் மக்கள் இல்லை எனவும் புரிந்துகொள்ள வேண்டும்." என்றார். பிரதமர் மோடி காவல்துறைக்கு ஒரே சீருடை அணிவிப்பது தொடர்பக பரிந்துரைத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

லெக்கின்ஸ் அணிய வேண்டுமா?

லெக்கின்ஸ் அணிய வேண்டுமா?

இதற்கு பதிலளித்த சீமான், "ஒரே மாதிரியான சீருடை என்றால் அவர் அணியும் லெக்கின்சை எல்லோருக்கும் கொடுத்துவிடலாம். ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகளை ஆளுநராக நியமிப்பதை நிறுத்த வேண்டும். மக்களில் இருந்து மக்களுக்காக சேவை செய்து வந்த தலைவர்களைதான் நியமிக்க வேண்டும்.

 ஆளுநராக யார் இருக்க வேண்டும்?

ஆளுநராக யார் இருக்க வேண்டும்?

இந்த அதிகாரிகள் இந்த பதவியை எதிர்பார்த்து இருந்தால், அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது என்னவாக இயங்கி இருப்பார்கள். ஒரு நீதிபதியை ஓய்வு பெற்றபிறகு ஆளுநராக நியமிக்கிறீர்கள். அவர்களிடம் என்ன நீதி இருந்திருக்கும்? ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு இயங்கும் ஒருவரிடம் மக்களுக்கான நியாயம், நேர்மை, உண்மைத் தன்மை எங்கிருக்கும்.

 அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவாலை நான் அறிவாளி என்று நினைத்தேன். நல்ல அதிகாரி என்று நினைத்தேன். காந்தி படமே ரூபாய் நோட்டுக்கு எதிர்ப்பவர்கள் நாங்கள். ஊழல், லஞ்சத்துக்கு, கொலை, குற்றத்துக்கு எதிராக இருந்தவர் காந்தி. ஆனால், கூலிக்கு கொலை செய்பவருக்கு பணம் கொடுக்கும் ரூபாயில் காந்தி சிரித்துக் கொண்டே இருக்கிறார். இதேபோல் கொலை செய்ய லட்சுமி, விநாயகர் படம் கொண்ட நோட்டை கொடுப்பீர்கள். அவன் ஒரு பைத்தியக்காரன்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+