'சீமானின் சினிமாஸ்'-பிரபாகரன் நடத்திய சீரியஸ் டிஸ்கஷன்..விஜய்க்கு சொன்ன 'பகலவன்' கதைக்கு ஒப்புதலாம்!
சென்னை: இலங்கை ராணுவத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் தமது இலங்கை பயணத்தின் போது தாம் எடுத்த திரைப்படங்கள் குறித்தும் புதிய திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும்; தமது புதிய படத்துக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்றும் தமக்கு தீவிரமான ஆலோசனைகளை வழங்கியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவரித்துள்ளார்.
இலங்கை பயணம் குறித்து இதுவரை பல்வேறு 'அறியப்படாத தகவல்களை' வெளியிட்டு வரும் சீமான் தற்போது முதல் முறையாக பிரபாகரனுடனான திரைப்படங்கள் குறித்த டிஸ்கஷன்களை விரிவாக விவரித்துள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: இலங்கைக்கு சென்றிருந்த போது பிரபாகரன், அடுத்து என்ன படம்பா என கேட்டார். என்னுடைய வாழ்த்துகள் படம் தோற்றுப் போய்விட்டது என் அண்ணனுக்கு (பிரபாகரனுக்கு) தெரிந்திருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான், என்னுடைய வாழ்த்துகள் படம் தோல்வி அடைந்ததை பிரபாகரனுக்கு தெரிவித்திருந்தார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, படம் ஓடவில்லை என தம்பி வருத்தமாக இருப்பான் என்கிறார் அண்ணன் பிரபாகரன். நான் வருத்தப்படாமல்தான் இருந்தான். ஆனால் பிரபாகரன், தம்பி வருத்தமா இருப்பாரோ என நினைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.. அவருக்ககு தெரிந்துவிட்டது.
சீமானின் சினிமா குறித்த பிரபாகரன் விமர்சனம்: அப்போது, நமக்கு எதுக்குப்பா பூ, கவிதை எல்லாம் என்றார். அப்போதுதான் நமக்குதான் படத்தை பற்றி சொல்கிறார் என நினைத்துக் கொண்டேன். மேலும், காதல் என்பது பருவ கால உணர்ச்சி.. அது எல்லோருக்கும் வரக் கூடியது. தமிழர்களுக்கு இல்லாதது மானமும் வீரமும்தான். அது வருகிற மாதிரிதான் படம் எடுக்கனும். எப்படி? 'தம்பி' படம் மாதிரி.. என்றார். அடுத்த வார்த்தையாக, நாம் திரையிலும் அடிக்க வேண்டும்.. தரையிலும் அடிக்க வேண்டும்.. அப்பதான் நமக்கு விடுதலை வரும் என்றார். அப்பதான் எனக்கும் புரிந்தது.
விஜய்க்கு சொன்ன பகலவன் கதைக்கு ஓகே: அடுத்து என்னப்பா படம் என்றார் பிரபாகரன். நான் 'பகலவன்' கதையை சொன்னேன் (நடிகர் விஜய்க்கு சீமான் சொல்லி இருந்த கதை). அது அண்ணனுக்கு (பிரபாகரனுக்கு பிடித்திருந்தது).. நல்லா இருக்கு என்றார். அப்புறம், சின்ன சின்ன பசங்களை வைத்து 'கோபம்' என்ற கதையை சொன்னேன். அப்போது, அருமையாக இருக்கு.. இதை எடுங்க என்றார் பிரபாகரன்.
சீமான் படத்துக்கு என்ன பெயர்.. தீவிர டிஸ்கஷன்: எங்க அண்ணன் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி.. அவரைப் பற்றி என்னிடம் பிரபாகரன் கூறுகையில், நமது முன்னவர்கள் எல்லாம் தமிழை கொட்டிவிட்டார்கள்.. நீங்கள் தமிழை ஏந்துங்கள் என தமிழ்த்துறை பொறுப்பாளராக வைத்திருக்கிறேன் என விளக்கம் தந்தார் பிரபாகரன். அப்போது தமிழேந்தி அண்ணன், கோபம் என்பது சமஸ்கிருத சொல். என்னை போடா வாடா என்றுதான் பேசுவார்கள்.. அதனால்.. டேய்.. கோபம் என்பது சமஸ்கிருதம்.. அதனால் 'சீமானின் சினம்'.. 'சீமானின் சீற்றம்'.. அப்படி எடு என ஆலோசனை தந்தார் தமிழேந்தி. அப்போது, தமிழேந்தியை சைகையாலேயே வாயை மூடிக் கொண்டு இருக்கவும் என்றார் பிரபாகரன்.
2026-ல் சலங்கை கட்டுவோம்: அத்துடன், தமிழேந்தியிடம் , அவரு (சீமான்) சும்மாவே ஆடுவாரு.. நீங்க சலங்கையை வேற கட்டிவிடுறீங்களா என்றார் பிரபாகரன். அன்று பிரபாகரன் சொன்ன சலங்கை எப்போது கட்டப்படுகிறது தெரியுமா? 2026-ம் ஆண்டு.. அன்று படைப்போம் புதிய அரசியல் வரலாறு.. இவ்வாறு சீமான் விவரித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications