நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுக மிரட்டுகிறது... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டி வருவதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Recommended Video

    Naam Tamilar ஆட்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிருடன் இருக்க முடியாது: சீமான்

    திலீபன் நினைவுநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு சென்னையில் மலர் வணக்கம் செலுத்திய அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

    Seeman says, DMK intimidates Naam Thamizhar Party candidates

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் பல இடங்களில் கடத்திக் கொண்டு சென்று வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கு நேரம் முடியும் வரை நாம் தமிழர் கட்சியினருக்கு திமுகவினர் பல்வேறு இடையூறுகளை அளித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    பெரியக் கட்சி என்று கூறப்படும் திமுகவுக்கு தங்களை பார்த்து ஏன் பயம் வருகிறது என வினவிய சீமான், தாங்கள் 10 ஓட்டுக்கள் வாங்கினால் உங்களுக்கு என்ன கவலை, 100 ஓட்டுக்கள் வாங்கினால் உங்களுக்கு என்ன கவலை, என திமுகவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    தேர்தலில் மோதிப்பார்ப்போம் என சவால்விட்ட அவர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடம் திமுகவினர் பேரம் பேசியதோடு மட்டுமல்லாமல் வெற்றி பெற்றால் கான்ட்ராக்ட் பணி தருகிறேன் என்றும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவும் எனவும் கூறி வருவதாக தெரிவித்தார்.

    ஆனால் தங்கள் கட்சி வேட்பாளர்கள் எதற்கும் பணியமாட்டார்கள் என்றும் முடிந்தால் அவர்களை நேருக்கு நேர் எதிர்த்து நின்று தேர்தலில் வென்று கொள்ளுங்கள் எனவும் சீமான் திமுகவினருக்கு சவால் விடுத்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை தக்க வைத்து தங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபணம் செய்தது.

    நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற மூன்றாவது கட்சி எது என்பதில் காங்கிரஸ் கட்சியோடு போட்டி போட்டு நின்றது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி குறிப்பிட்டு சொல்லும் வகையில் வாக்கு சதவீதத்தை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+