என் நிலை யாருக்குமே வரக் கூடாது- நடிகை விவகாரத்தில் சீமான் திடீர் உருக்கம்
சென்னை: என்னை விமர்சிக்க திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தகுதியில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: என்னை விமர்சிக்க திமுக, திகவுக்கு தகுதியில்லை.
பாலியல் வழக்கில் என்னை விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை வரவேற்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட நிலை, இந்தியாவில் வேறு யாருக்கும் வரக் கூடாது. எனக்கு எதிரான வழக்கு நிற்காது. என் மகன் தற்போது 10ஆம் வகுப்புக்கு வந்துவிட்டான். அவனுக்கு என்னை பற்றி தெரியும். ஆனால் அவன் நண்பர்கள் இந்த விஷயத்தை பேசும் போது சங்கடப்படுவான். அதற்காகத்தான் இந்த வழக்கை முடித்து வைக்க வழக்கு போட்டேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர், 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீஸார் இரு முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஒரு வழியாக கடந்த பிப். 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஆஜராகினார். அப்போது அவரிடம் 63 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே சீமானிடம் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை இதுவரை 3 முறை வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
ஆட்சி மாற்றம் நடைபெறும் போதெல்லாம் அந்த நடிகையின் வழக்கை கையில் எடுக்க வைக்கிறார்கள். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அது போல் நடிகை தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நீதிபதிகள், இரு தரப்பும் சமரசம் பேச உத்தரவிட்டு, எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே பாலியல் குற்றவாளி சீமானை கைது செய் என சென்னையில் திராவிடர் கழக அமைப்பு போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது போல் நடிகையை சீமான் அவதூறாக பேசி வருவதை பெண் தலைவர்கள் கண்டித்துள்ளனர். அவர்களும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்கிறார்கள்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications