சிலர் சாமியை காக்க போராடுகிறார்கள்.. நாம் பூமியை காக்க போராடுகிறோம்.. சீமான் நறுக் பேச்சு
சென்னை: சாதிக்கு ரத்தவெறி இருக்கிறது. ஆனால் ரத்தத்திற்கு சாதிவெறி இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
முந்திரிக்காடு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் கோபமாக பேச வேண்டும் என பேசவில்லை.
நான் ஒரு அப்பாவி. பல ஆண்டுகள் இருந்த வலி அது ஆவேசமாக மொழியாக வருகிறது. நல்ல விஷயம் நடந்தால் திராவிடன், பெரியாரியன் என்று பேசுவதும், தலைக்குனியும் பிரச்சினை வரும் போது மட்டும் தமிழன் தலை குனிய வேண்டும் என சொல்லுவது நாக்கை திருத்த முடியாத தமிழன் எப்படி நாட்டை திருத்துவான்.

எழுச்சி
இழிவு என்று எது சொல்லப்படுகிறதோ அதை எழுச்சியாக மாற்ற வேண்டும். உலகத்தில் இருப்பவன் தாய்மொழியில் பெயர் வைத்தான். ஆனால் தமிழன் தாய்மொழியையே பெயராக வைத்தான்.

ரத்தத்திற்கு சாதி
முன்னேறிய ஜாதி பிரிவினருக்கு எதற்கு இடஒதுக்கீடு. அதுதான் முன்னேறிவிட்டாரே எதற்கு இடஒதுக்கீடு என்று கேட்டால் பதில் இல்லை. சாதிக்கு ஏது முன்னேற்றம். சாதிக்கு ரத்த வெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை.

தோண்டுதல்
கிமு, 300 ஆண்டுதான் தமிழ் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் போட்டுள்ளனர். கீழடியை தோண்டுங்கள் எத்தனை பழமையானது என தெரியும். எதையெல்லாம் தோண்ட சொல்கிறோமோ அதை தோண்டமாட்டார்கள். எதையெல்லாம் மூட சொல்கிறோமோ அதையெல்லாம் தோண்டுவார்கள்.

பூமி
உதாரணத்துக்கு ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகும். சிலர் சாமியை காப்பாற்ற போராடுகிறார்கள். நாங்கள் பூமியை காப்பாற்ற போராடுகிறோம் என சீமான் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications