என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாஜகவை கொள்கை எதிரி என சொல்லும் விஜய், அவரின் கொள்கை என்ன என சொல்ல வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், பாஜகவை கொள்கை எதிரி என சொல்லும் விஜய், அவரின் கொள்கை என்ன என சொல்ல வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman-seeman-questions-what-vijays-ideology-is-given-that-he-labels-the-bjp-as-an-ideological-ad

காசுக்கு தான் போட்டி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொருவர் மக்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். 2 ஆயிரத்துக்கும், 2,500 ரூபாய்க்கும் தான் போட்டி. திமுகவை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், ஏன் ஒழிக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும்.

பாஜக கொள்கை எதிரி என்கிறார். எந்த இடத்தில் உங்கள் கொள்கைக்கு எதிராக அவர்கள் உள்ளனர். முதலில் விஜயின் கொள்கை என்ன என்பதைக் கூற வேண்டும். அதன் பிறகு தான் பாஜக கொள்கை எதிரியா என்பதை முடிவெடுக்க முடியும். திமுகவை ஏன் ஒழிக்க வேண்டும் என்பது குறித்து விஜய் பேச வேண்டும். டாஸ்மாக்கை விற்று நாட்டு மக்களை குடிகார சமூகமாகவும், குற்றம் நிறைந்த சமூகமாகவும் அரசு ஆக்கிவிட்டது.

டாஸ்மாக் மூடப்படுமா

2 வயது குழந்தையை ஒருவன் வன்புணர்வு செய்து கொலை செய்கிறான் என்றால் அவன் மனநிலை சரியாக இல்லை. மனநோயாளி போன்று குடிநோயாளிகளாக மாற்றிவிட்டனர். யாருமே டாஸ்மாக்கை மூடவில்லை. என் தம்பி விஜயாவது டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொல்ல வேண்டாமா. மதுவை திறந்துவிட்டு, வீதிதோறும் சாராயக் கடைகளை வைத்துவிட்டு, போதையை அனுமதித்துவிட்டு நேர்மை, நன்னெறி, ஒழுக்கம், சட்டம் ஒழுங்கு, தர்மம் இவற்றையெல்லாம் பேசுவது கேவலம். இதைப் பத்தி பேசி பயனில்லை.

பாஜகவின் ஏ டீமே திமுக தான். இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்கைத் தக்க வைப்பதற்காக எல்லோரையும் பி டீம் என்று கிளப்பி விடுவார்கள். பாஜகவை காலூன்ற விட்டதே திமுக தான். வாஜ்பாயின் நிலையான ஆட்சியைக் கொடுக்க வைத்தது திமுக. எல்லோரும் பி டீம் என்றால் ஏ டீம் யார். அதுதான் திமுக என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+