நீங்க வந்து நடிங்க.. மக்கள் தேடட்டும்னு தம்பி சிவகார்த்திகேயன் சொன்னாப்ல.. சீமான் கூறிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: நீங்கள் வந்து நடிங்க.. மக்கள் உங்களை தேடட்டும் என்று தம்பி சிவகார்த்திகேயன் சொன்னதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடித்தால் தானோட்டு போடுவீர்கள் என்றால், நான் நடிக்க போகிறேன் என்று கூறிய சீமான், இப்போதெல்லாம் நடித்தால் நிறைய காசு கொடுக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நாதக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் தொகையை பெறவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீமான் கூட படுதோல்வியை சந்தித்தார். இந்த தோல்விக்கு பின் சீமான் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்திலும், சாந்தனு நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க சீமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Seeman

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதால், அதற்குள் இளைஞர்கள் மத்தியில் நடிகனாக சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று சீமான் முடிவு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் சீமான் பேசுகையில், இப்போதெல்லாம் நடிக்க சென்றால், நிறைய காசு கொடுக்கிறார்கள். நல்லா இருக்கு.. தம்பி சிவகார்த்திகேயன் கூட சொன்னாப்ல.. நீங்க வந்து நடிங்க.. மக்கள் உங்களை தேடட்டும் என்று.. சரி நான் சினிமாவுக்கே போறேன்.. மேடையில் பேசிவிட்டு கீழே போனால் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நல்ல நடிச்சிருக்கீங்கனு சொல்றான்.. நடித்தால் தான் ஓட்டு போடுவீர்கள் என்றால், நடிக்க போகிறேன்.

மக்களுக்காக அழும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் வீண் தான்.. அக்கறையில் தான் மக்களை திட்டுகிறேன். தவெகவின் 4 மாத ஆட்சியையே தாங்க முடியவில்லை. தவெகவுக்கு ஆதரவு கொடுத்தவர்களே இப்போது மன்னித்துவிடுங்கள் என்று சொல்லும் நிலை வந்தது. இதனைத் தானே அப்போதே கூறினேன். சட்டசபையில் ஒருவர் தனது வெற்றிக்கு பாடுபட்ட மனைவி, கொழுந்தியாவுக்கு நன்றி சொல்கிறார்.

திமுக, அதிமுக ஒன்றாக இருந்தால் என்ன.. மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள்.. பெரம்பூரில் விஜய் போட்டியிட காரணம் மதம்.. திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய்யின் மதமும், சாதியும் காரணம்.. அதேபோல் ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்று ஆதரவளித்தாக கூறுகிறார்கள். ஆளுநர் ஆட்சி வந்தால் என்ன.. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளால் தனித்து நின்று வெல்ல முடியுமா?

என்னை முதல்வர் ஆக்குகிறோம், கட்சிக்கு நிதி அளிக்கிறோம் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். பணம் தான் முக்கியமென்றால், 8.5% வாக்குகளை வைத்திருந்த என்னிடம் எவ்வளவு பேரம் பேசி இருப்பார்கள்? நான் வாடகை வீட்டில் வசிப்பதற்காக எல்லாம் வருத்தப்படுகிறார்கள்.. இறுதியாக கூட்டணிக்கு அழைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+