செட் போட்டு.. மூஞ்சியில டார்ச் லைட்டு அடிச்சிக்கிட்டு இருக்கார் கமல்ஹாசன்.. சீமான் அட்டாக்

இலங்கை குண்டுவெடிப்பில் கமல், ரஜினி குறித்து கருத்து என்ன என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "செட் போட்டுக்கிட்டு.. மூஞ்சியில டார்ச் லைட்டு அடிச்சிக்கிட்டு இருக்கார் கமல்ஹாசன்.. அவர் ஆற்றுமணல் கொள்ளை குறித்து என்ன நினைக்கிறார்? இலங்கை குண்டுவெடிப்பு, பொன்பரப்பி குறித்தெல்லாம் ரஜினிகாந்த் கருத்து என்ன" என்று கேட்டு கமல், ரஜினியை வாரி வறுத்தெடுத்து விட்டார் சீமான்!

இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு சீமான் பேசியபோது, கமல், ரஜினியை கடுமையாக சாடினார்.

"அவ்வளவு பெரிய வீரன் சதாம் உசேனை தூக்கில போட்டுட்டாங்க. எத்தனை இஸ்லாமிய நாடுகள் அவருக்கு ஆதரவா வந்தது? ஒருத்தனும் வரலை. அவரை விசாரிப்போம்னு ஐநா சொல்லியும் யாருமே கேட்கலியே? கடைசியில தூக்கு போட்டு கொன்ன பிறகுதான் பேராயுதங்களை வைச்சிருந்தது அமெரிக்கான்னு தெரியவந்தது.

கட்டமைப்பு

ஏன்னா, என் நாடு, என் இனம், என் நிலம், என் வளம், என் மொழின்னு எவன் பேசுறான்னா அவனெல்லாம் இவனுக்கு எதிரி.. நான் உட்பட! இதுதான் இனி நடக்கும்.. பார்த்துட்டே இருங்க!

புரோக்கர்ஸ்

புரோக்கர்ஸ்

மெதுவா மெதுவா கட்டமைப்பான். என்னை பயங்கரவாதின்னு சொல்லுவான்.. சமூகவிரோதின்னு சொல்லுவான்.. பிரிவினைவான்னு சொல்லுவான்.. டெரரிஸ்ட்னு சொல்லுவான்.. ஏன்னா அவர்களுக்கு வேண்டியது தலைவர்கள் அல்ல.. தரகர்கள்.. காட்டின இடத்துல, நீட்டின இடத்துல.. கையெழுத்து போடும் புரோக்கர்ஸ்! அதுக்குதான் கமலஹாசன், அதுக்குத்தான் ரஜினிகாந்த்.. அதுக்குத்தான் நடிகன் என நோக்கமற்றவர்களாக கொண்டு வர்றான்.

பொன்பரப்பி

பொன்பரப்பி

ஆற்றுமணல் கொள்ளை.. கமல்ஹாசன் கருத்து என்ன? மலைகளை கற்குவாரிகளை சொல்லி அள்ளி கொண்டுபோவது பற்றி கருத்து என்ன? ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 700-க்கும் மேற்பட்ட குழாய்களை பதுக்கி இருக்கிறார்களே.. இதில் ரஜினிகாந்த் கருத்து என்ன? பொன்பரப்பியில் நடந்த சாதிக்கலவரத்தில் உங்க கருத்து என்ன? இலங்கை குண்டுவெடிப்பில் உங்க ரெண்டு பேர் கருத்து என்ன? ஒன்னும் இருக்காது.

டார்ச் லைட்

டார்ச் லைட்

"கமல்ஹாசன் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தார்" என்று இந்து என்.ராம் ஐயா சொல்றார். உழைப்புன்னா என்னன்னுகூட தெரியாதவர்களை பார்த்து! கமல்ஹாசன் உழைத்தாரா? கமல்ஹாசன் அரசியலை சினிமா போலவே எண்ணிக் கொண்டிருக்கிறார். செட் போட்டுக்கிட்டு.. மூஞ்சியில டார்ச் லைட்டு அடிச்சிக்கிட்டு இருக்கார். எங்களை போய் இனவாதின்னு சொல்றாங்களே?

எஸ்வி சேகர்

எஸ்வி சேகர்

"என் கணிப்பு சரியாக இருந்தால் 6 விழுக்காடு ஓட்டு பெற்று சரியான இடத்தை தக்க வைத்து கொள்வார்ன்னு" எஸ்.வி.சேகர் சொல்றார். இந்த பாசம் எங்க கூட்டத்துல ஒருபயலுக்கும் என் மேல இருக்க மாட்டேன்குதே ஏன்? என்னை காலி பண்றதுக்குதான் வேலை நடக்குது" என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+