கொடூர திமுக ஆட்சி.. கொலைக்களத் தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி! ரைமிங்கில் விளாசிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாமக்கல் சித்தம்பூண்டி மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொடூர திமுக ஆட்சிக்கு, கொலைக்களத் தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் தோட்டத்துவீட்டில் வசித்துவந்த மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

திமுக ஆட்சியில் கொங்கு மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் முதியவர்களை குறிவைத்து அடுத்தடுத்து நடைபெறும் தொடர்படுகொலைகள் அதிர்ச்சி என்பதை தாண்டி அன்றாட நிகழ்வாகிவிட்டதுதான் கொடுந்துயரத்தின் உச்சம்.

Seeman DMK crime

ஒரே இடங்களில், ஒரே மாதிரியான படுகொலைகள், ஒரே வகையில் தொடர்ந்து நடைபெறுகின்றபோதும் கூட தடுக்க முடியவில்லை என்பது, திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு செயலற்று போயுள்ளது என்பதையே காட்டுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு மாவட்டம் சிவகிரி, தற்போது நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி என்று கொங்கு மண்டலத்தில் தொடரும் இக்கொடூரக் கொலைகள் திமுக ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக வாழவே முடியாத பேராபத்தான சூழல் நிலவுவதையே உறுதிப்படுத்துகிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத்தரப்பு மக்களும் வெளியில் மட்டுமல்ல வீட்டில்கூட பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவது சட்டம்-ஒழுங்கு சீரழிவின் மிகமோசமான நிலையாகும். அரசையோ, காவல்துறையை*யோ நம்பி பயனில்லை, திமுக ஆட்சியில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை எனும் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.

மீதமிருக்கும் ஓராண்டு ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரக்கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை தமிழ்நாட்டு மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. திமுக ஆட்சி என்றாலே ரத்த வெள்ளத்தில் மக்கள் மிதக்கும் காட்சிதான் அனைவரின் நினைவுக்கும் வருமளவுக்கு படுகொலைகள் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறுகிறது.

கொலைவெறி கொடூரர்களின் கூடாரமாகிப்போன தமிழ்நாட்டை மீட்க மக்களின் குருதியைக் குடிக்கும் திமுக ஆட்சியை அகற்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்லாட்சியை மலரச்செய்வது ஒன்றே ஒற்றை வாய்ப்பும், தீர்வுமாகும்!" என கூறியுள்ளார்.

மூதாட்டி கொலை: குளத்துப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் சாமியாத்தாள் என்பவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன் தினம் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வந்த மர்ம நபர்கள், பணம், நகை எதுவும் வீட்டுக்குள் இருக்கிறதா என கேட்டு மிரட்டினர். இதனால் அவர் சத்தமிட்டதால் கத்தியால் கழுத்து வாய் மற்றும் முகத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரே, உறவினர்களுக்கு தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+