"வாக்கு என்ன நீயாவேவா குத்திக்கிட்ட? *** மக்கள்கிட்ட தானடா கேட்ட" மேடையில் வார்த்தையை விட்ட சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நடந்த கட்சி கூட்டத்தில் முகம் சுழிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரள்நிதியில் கார் வாங்கியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சீமான் கோபமாக வார்த்தையை விட்டுள்ளார்.

சீமான் தனது மேடைப் பேச்சுக்களில் கடுமையான வார்த்தைகளைக் கையாள்வது வழக்கம். சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசும்போதும் சீமான் சில சமயங்களில் அநாகரிகமான வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

Seeman Sparks Controversy with Angry Response to Allegations

சீமான் பேச்சு

சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "என்றைக்கு நீ நான் தமிழன், என் தாய்மொழி தமிழ் என்ற திமிரைக் கொள்கிறாயோ, அன்றைக்கு இந்த இனம் எழும், விடுதலை அடையும். உன் உள்ளத்தில் எழுதிய ஆங்கிலம் ஒரு மொழி, அது அறிவல்ல. அடுத்தவன் மொழி எனக்கு எப்படிடா அறிவாகும்?

இந்த நாட்டில் எல்லா மொழியும் படிப்போம், நாங்கள் வாழ எங்கள் மொழி தமிழ் படிப்போம், எங்கள் இனம் வாழ... மொழி என் முகம், என் முகவரி, என் கலை, என் இலக்கியம், என் அடையாளம், என் வரலாறு, என் அரசியல், என் உயிரடா என்று என்னைக்கு நீ நினைக்கிறியோ அன்னைக்கு வருமடா உனக்கு உணர்வு, மானம், வீரம், ரோசம் எல்லாம் வரும்டா! நீ தமிழ் என்று உச்சரிக்காதவன், தமிழன் என்று உச்சரிக்காதவனிடம் நாட்டை கொடுத்துவிட்டு எங்களை நடுரோட்டுல நிறுத்திட்டீங்கடா பைத்தியக்காரப் பயல்களா! நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலைக் கூட்டமே! தலைவன் எவன்?

அயோக்கியப் பயல்

எங்களுக்கெல்லாம் ஒரு பெருமிதமும் திமிரும் இருக்குடா! என்னடா எங்கள சொல்ல முடியும்? புறம் பேசுவ, அவதூறு பேசுவ, பொய்யை பரப்புவ, கட்டமைப்பைப் பேசி என்ன பேசுவ நீ? 'திரள்நிதி திருடர்கள்'... இவ்வளவு நாள் சொல்லிட்டு இருந்தவன் யாரு? திருட்டு நிதிக்காரன். இப்ப சொல்ற அயோக்கியப் பயலுங்க, பிளாக் டிக்கெட் காரன், கள்ளச்சந்தையில் திரைப்படம் பார்க்கிற டிக்கெட்டை விற்ற அயோக்கியப் பையன் எங்களை திரள்நிதி திருடன் என்கிறான்.

ஆட்டம் மாறி மாறிதான் ஆடுவோம். இந்த ஆட்டம் உங்க கையில இருக்கு, உங்க கால்ல இருக்கிற பந்து ஒரு நாள் எங்கள் கால்களுக்கு வரும், பார்த்து ஆடணும். பார்த்து பேசணும். 'வாதத்தில் தோற்பவன் அவதூறை கையில் எடுப்பான்' என்கிறான் சாக்ரடீஸ். தம்பி கொலை வெறியில இருக்கோம்.. மண்டியிட்டு வாழ்வதை விட மானத்தோடு மடிவது மேலானது; சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டுச் சாவது மேலானது - இதான்டா மானத் தமிழனின் கோட்பாடு.

நம் கனவு

நமக்கு ஒரு கனவு இருக்கிறது, நம் தலைவர் நமக்கு கையளித்த பெரும் கனவு இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் தூக்கிச் சுமந்த கனவு, நம் தலைவனும் பல்லாயிரக்கணக்கான நமது மாவீரர்களும் சுமந்த கனவு இன்று நமது கைகளில்! காலம் வேறு, காலம் வேறு, கனவு ஒன்றுதான். இலக்கு ஒன்றுதான் நம் இனத்தின் விடுதலை.

மானத்திற்காக போராட வந்த பிள்ளைகள் நாங்கள், ஆனால் தன்மானத்தை இழந்துவிட்டு போராட மாட்டோம். தேர்தலில் தோற்றுவிட்டு போறோம், யாரிடம் தோற்கிறோம்? தோல்வி இனங்களுக்கானது அல்ல. "சாதி பார்த்து போடாதே ஓட்டு; அது எனக்கு தீட்டு" ன்னு பேசுனது நாம்.. புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஆதி தமிழ் சமூக மக்களுக்கு தேடி தேடி தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்தது நாம்! ஆதி தமிழ் குடிகளை 22 பொதுத் தொகுதிகளில் நிறுத்தியது நாம்.

** மக்கள்கிட்டதானடா கேட்ட

சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டார்னு சொல்றாங்க.. திரள்நிதியில் ஒரு தேநீர் கூட அருந்தமாட்டோம். திரள் நிதியை மக்களிடம் தான் கேட்க முடியும்.. நீங்கள் மக்களிடம் வாக்கு கேட்கலையா.. வாக்கு என்ன நீயாவேவா குத்திக்கிட்ட? *** மக்கள்கிட்ட தானடா கேட்ட" என ஆவேசமாகப் பேசினார் சீமான்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்திற்கு காரணம் யார்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..? நீங்கள் தேவாலயத்தில் முட்டிக்கால் போட்டு வழிபட்டதெல்லாம் உண்மை என்றால் சொல்லுங்க யார் காரணம் என்று? பாதிக்கப்படவர்களுக்கு அரசு வேலை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது ஏன்?

மதமும் சாதியும்

முதலமைச்சர் ஆனதும் ஜோசப் விஜய் என்று போட்டுக்கொள்கிறார். முதல் திரைப்படத்திலிருந்தே ஜோசப் விஜய் என்று போட்டிருக்க வேண்டியதுதானே. நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது; பெரம்பூரில் நின்றதுக்கு பின்னால் இருப்பது மதம். திருச்சி கிழக்கில் நின்றதுக்கு பின்னால் இருப்பது மதமும் சாதியும் தான்.

தமிழ்நாட்டில் சில சொற்கள் மதிப்பிழந்து கேவலப்படுகிறது. மாற்றம், புரட்சி, தளபதி, வரலாறு இந்தச் சொற்களெல்லாம் அவமானப்படுகிறது. தளபதி என்றால் எந்தப் படைக்கு தளபதி; சொறிசிரங்கு படையா? போதைப்பொருளை ஓடி ஒளிக்கக் கூடாது தேடி ஒழிக்கணும். திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டு காலம் வெறும் விளம்பர அரசியல் மற்றும் தேர்தல் அரசியலைத் தான் செய்தது. அதையேதான் முதலமைச்சர் விஜய் செய்கிறார். தவெக அரசு செய்வது only reels தான் no rules" என்று பேசியுள்ளார் சீமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+