விளாசிட்டாரே சீமான்.. கவனிச்சீங்களா? "ஐயா கருணாநிதி காரணம்"னு சொன்னதுமே.. குஷியில் துள்ளிய "தம்பிகள்
சென்னை: 2 நாட்களாகவே, சீமான் பேசிய வீடியோ ஒன்றினை, நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? சீமான் என்ன பேசினார்?
நடிகை விஜயலட்சுமி விவகாரம் இந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக பேசப்பட்டது. சீமான் எந்த நேரமும் கைதாவார் என்ற செய்திகளும் வட்டமடித்தன.. ஆனால், பரபரப்புகள் அதிகமாகி கொண்டே போனதே தவிர, சம்பவத்தின் முடிவு சுபம் போல ஆகிவிட்டது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.

கயல்விழி: இந்த வழக்கு தொடர்பாக தானும் ஆஜராக வேண்டியிருப்பதால், சீமான் மனைவி பெருத்த வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருப்பார் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கேஷூவலாகவும், இயல்பாகவும் சீமானுடன் கயல்விழி வந்ததும், செய்தியாளர்களிடம் சரளமாக பேசியதும், பலரையும் கவனிக்க வைத்தது.. விஜயலட்சுமி விஷயத்தில், தனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடு சீமானுடன் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
கயல்விழியின் இந்த பேச்சினை தமிழக மக்கள் கவனித்த அதேசமயத்தில், நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவர் தடா நா. சந்திரசேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கயல்விழியின் பேச்சு அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. முதன்முறையாக இந்த மேடையில்தான் கயல்விழி உரையாற்றினார்.
கண்கலங்கிய பேச்சு: என்ன பேசுறதுன்னே தெரியல, மேடையில் பேசி பழக்கமில்ல சீமானுக்காக என்னை பொண்ணு பார்த்தவரே மாமா தான் நா. சந்திரசேகரன்). ஆரம்பத்தில் எங்க 2 பேருக்கும் சின்ன சின்ன பிரச்சினை வரும். அப்போ அவரு என்கிட்ட சொல்ற ஒரே வார்த்தை, "தம்பி (சீமான்) ரொம்ப நல்லவன்மா.. அவன் எது பண்ணாலும் சரியாதான் இருக்கும்..ம்மா" என்பார், மாமா உங்களை நாங்கள் ரொம்ப தவற விடுறோம். தனிப்பட்ட முறையில் நான் தவற விடுறேன்" என்று தழுதழுத்த குரலில் கயல்விழி பேசவும், சீமானும் கண்கலங்கினார்.
இதற்கு பிறகு, சீமான் பேசும்போது, தடா.நா சந்திரசேகரனின் நினைவுகளை உணர்ச்சிப்பெருக்குடன் பகிர்ந்து கொண்டார்.. அப்போது கருணாநிதி குறித்தும் சீமான் பேசினார்.
கருணாநிதி: "இப்போ நான் ஒரு விஷயத்தை சொல்லி ஆகணும். நான் எப்படி மூத்தவருக்கு கடமைப்பட்டிருக்கிறேனோ, அதே அளவுக்கு ஐயா கருணாநிதிக்கும் கடன்பட்டிருக்கிறேன்... என் தலைவன் பிரபாகரனின் தலைக்கு 10 லட்சம் ரூபாயை அறிவித்து சுவரொட்டி ஒட்டி, "இவன்தான் உங்கள் தலைவன்" என தமிழர்களுக்கு சிங்களன் எப்படி அடையாளம் காட்டினானோ, அதேபோலவே, என்னை தொடர்ச்சியாக சிறைப்பிடித்து, இதோ உங்கள் தலைவன் என அடையாளம் காட்டியவர் ஐயா கருணாநிதி தான்" என்றார் சீமான்.
சீமான் இப்படி சொன்னதுமே, சீமானின் தம்பிகளின் கைதட்டல் அரங்கையே அதிர வைத்தது. கயல்விழி பேச்சும், சீமானின் இந்த பேச்சும்தான், இணையத்தில் 2 நாட்களாகவே வட்டமடித்து கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications