Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானின் "டபுள் சொல்".. ஆமா, மோடி கிட்ட ஸ்டாலின் ஏன் ஓடறாரு? ஓஹோ சமாதானமா.. நடுவுல கருணாநிதி வேறயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகன் அப்படி பேசினால், அப்பா ஓடோடி சென்று மோடியை சமாதானம் செய்வாரா? என்று முதல்வர் ஸ்டாலின் குறித்து, நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொள்ளாச்சியில் 2 நாட்களுக்கு முன்பு, சீமான் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, பேசும்போது, உதயநிதியை பாசத்துடன் தம்பி என்று அழைத்து, அவருக்கான ஆதரவை மறைமுகமாகவே சீமான் அளித்ததாக கருதப்பட்டது.

Seeman speech and What did Seeman criticize TN Chief Minister MK Stalin, Udhayanidhi

சனாதனம்: சீமான் பேசும்போது, "சனாதனம் குறித்து தம்பி உதயநிதி கருத்து சொன்னால், அமித்ஷா எதுக்கு கோபப்படுகிறார்? அமித்ஷாவுக்கு, சாதியும் மதமும் வேண்டும்.. அவருக்கு அது 2 கண்கள்..

நாயில் கூட உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இருக்கு.. இதெல்லாம் ஒருவித மனநோய்.. இந்த வைரஸ்களை ஒழித்தே ஆகணும்.. பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழிக்க முடியாமலே இருக்கிறது.. அதனை நிச்சயம் ஒழிக்க முடியும், ஆனால் எல்லோரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும்... ஏற்ற தாழ்வுகளை சரிசெய்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்ய வேண்டும்.. உதயநிதி சொன்னதில் நான் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

சாமியாரா அவர்: இதற்கு பிறகு இன்னொரு பேட்டியை சீமான் தந்திருந்தார்.. அப்போது, "உதயநிதி தலைக்கு ரூ.10 கோடியை அந்த சாமியார் அறிவித்திருக்கிறாரே?" என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு சீமான், "ராமர் பற்றி பேசிய கருணாநிதி தலையை சீவுபவர்களுக்கு, பரிசு அறிவித்தவர்கள்தானே இந்த வட இந்திய சாமியார்கள்... உதயநிதி கருத்தை, கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்... அவர் தலையைக் கொண்டு வா என்றால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் ஒரு சாமியார் பேசுறதா? அப்படின்னா, நீயெல்லாம் என்ன சாமியார்? தலையை வெட்டிக்கொண்டு வா என்றால், இவர் ஒரு ரவுடிதானே?" என்று சீறியிருந்தார்.

விஜயலட்சுமி விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், சீமானை கைது செய்யப்போவதாக தகவல்களும் பரவியநிலையில், சில நாட்களாகவே, திமுகவை ஆதரித்து சீமான் பேசும் பேட்டிகள், பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..

சீமான் கைது?: கைது நடவடிக்கை பாயாமல் இருப்பதற்காகவே, சீமான் இவ்வாறு பேசுவதாகவும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகின.. ஆனால், சீமானின் வீட்டுக்கே சென்று, சம்மன் தரப்பட்டுள்ளது.. நாளைய தினம் அவர் ஆஜராவார் என்றும், அப்போது அவரிடம் வாக்குமூலத்தை பெறும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், சிவகங்கையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. திமுகவை சரமாரியாக சாடி, கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார்.

"திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். தமிழகத்தில் கஞ்சா விற்பனை சகஜமாக நடக்கிறது. போலீசார் கஞ்சா விற்போரை கைது செய்வதில்லை. சனாதனத்தை வைத்து திமுகவினர் அரசியல் செய்கிறார்கள்.. பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் நிற்க ஆசைப்படாதீர்கள் என்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, அப்போது சொன்னதை மறுக்க முடியுமா?

ஜனநாயக அழிப்பின் தொடக்கமே காங்கிரஸ் தான்... ஜனநாயகத்தை பற்றி பேச ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதியுள்ளது? புதிய கல்விக் கொள்கையானது நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்கக் கூடிய மரண சாசனமாகும்.

மிரட்டல்கள்: சுதந்திர போராட்ட வீரர் வைத்தியநாதய்யர் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்து சென்றார். அப்போது அவரை ஒருவரும் ஆதரிக்காமல் மிரட்டல் விடுத்தார்கள்.. அந்த நேரத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயா மட்டுமே அவருக்கு துணையாக நின்றார்.

இண்டியா கூட்டணியில் ராகுல், திமுகவினரை தவிர, மற்ற அனைத்து கட்சி தலைவர்களும் சனாதனத்தை ஆதரிக்கிறார்கள்.. இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் யாரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்காதபோது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் பங்கேற்றது ஏன்? சனாதனத்தை ஒழிக்க இந்த திமுக என்ன செய்தது? காமராஜர், ஜெயலலிதா கூட ஆதி திராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்குப் பதவிகளை வழங்கி சனாதனத்தை ஒழிக்க முன்முயற்சி எடுத்தார்கள்.. ஆனால், சனாதன வார்த்தையையே ஒழிக்க முடியவில்லை.

சனாதன தலைவர்: அதை எப்படி ஒழிக்க முடியும்? உதயநிதி சென்னது போல், சனாதனம் ஒரு கிருமிதான். ஆனால், திமுகவே ஒரு சனாதன கட்சிதான். ஜி-20 மாநாட்டுக்கு இண்டியா கூட்டணியிலிருந்து வேறு யாரும் செல்லாதபோது, மு.க.ஸ்டாலின் மட்டும் சென்றது ஏன்? அப்படின்னா, மகன் சனாதனத்தை எதிர்ப்பார்... அப்பா ஓடோடிச்சென்று, மோடியிடம் சமாதானம் செய்வாரா? சனாதன தலைவரே மோடி தான். அவருடன் சேர்ந்து, ஸ்டாலின் ஏன் நிற்க வேண்டும்? என்று சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வைரல் பேச்சுக்கள்: உதயநிதியின் பேச்சுக்கு சப்போர்ட் செய்து, 4 நாட்களுக்கு முன்பு சீமான் பேசிய பேச்சும் சரி, நேற்றைய தினம், திமுகவை தாறுமாறாக திட்டி சீமான் பேசிய இந்த பேச்சும் சரி, இரண்டையுமே தமிழக மக்கள் கவனித்தவாறே உள்ளனர்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+