விஜய் பேசிய கெட்டவார்த்தை.. வேற எப்படி பேசுறது? இதான் மக்கள் மொழி.. சப்போர்ட்டாக வந்த சீமான்!
சென்னை: நடிகர் விஜய், 'லியோ' திரைப்பட ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்க்கு சப்போர்ட்டாக பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லியோ'படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் 'லியோ' படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தாலும், டிரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது.

அந்த வசனம் மியூட் செய்யப்படாமல் அப்படியே ஒலித்தது.'லியோ' ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவராலும், குறிப்பாக குழந்தைகளால், பெண்களால் விரும்பக்கூடிய ஒரு ஹீரோ, அனைவரின் கவனமும் பெற்ற ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூகப் பொறுப்புள்ள ஒரு நடிகர் இப்படிச் செய்யலாமா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் லியோ படத்தில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "விஜய் அப்படி பேசுவது ட்ரெய்லரில் இருந்திருக்கும். தணிக்கையில் அதனை நீக்கியிருப்பார்கள். விஜய் இதில் இந்த வசனம் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சாதாரணமான மக்கள் மொழியில் இயல்பாக படம் எடுக்கும்போது இப்படித்தான் வரும்.
வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இயல்பான பேச்சுகள் இருக்கும். வாருங்கள், அமருங்கள் என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்க முடியாது. வெப் சீரிசில் கேவலமாக கொச்சையாக பேசக்கூடிய வார்த்தைகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. மயிர் என்ற வார்த்தையையே இங்கு கெட்ட வார்த்தையாக பரப்பி வருகின்றனர். விஜய் பேசுவதால் எல்லாரும் பேசப்போவது இல்லை. விஜய் சிகரெட் பிடிப்பதாலோ இல்லை மது அருந்துவதாலோ அதேபோல் எல்லாரும் செய்வார்கள் என்று கூறுவது தவறு." என பதிலளித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications