பழிப்பது குறையாது..கழிப்பது இயலாது! வார்த்தையில் விளையாடி வைரமுத்து வாழ்த்து! சீமானின் ரியாக்சன்..?
சென்னை: மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியை கவிஞர் வைரமுத்து பாராட்டியிருந்த நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தவிர்த்து அனைத்து வேட்பாளர்களுமே படுதோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி சிறப்பான முன்னேற்றத்தை சந்தித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்த கட்சியினர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தாலும் 8.1 சதவீத வாக்கை பெற்று மாநில கட்சிகளில் சிறந்த வாக்கு வங்கியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் அந்த கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக அரசியலில் கால் பதித்த நாம் தமிழர் கட்சி அதற்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது. 2016ல்வெறும் ஒரு சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த அந்த கட்சி 2019 3.8 சதவீதமாக அதிகரித்தது. 2021ல் 6.7 சதவீதமாக உயர்ந்த அந்த கட்சியின் வாக்கு சதவீதம் தற்போது 2024ல் 8.1 சதவீத வாக்குகளை குவித்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என களமிறங்கிய நாம் தமிழர் கிட்டத்தட்ட அதில் பாதியை தாண்டிவிட்டது என சொல்லலாம்.
வாக்கு சதவீதத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கின்றனர். ஏழு பேர் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். சிவகங்கையில் அதிகபட்சமாக நாம் தமிழர் வேட்பாளர் 1.63 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.

இதனையடுத்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் உள்ளிட்டோர் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித் தனியே சீமான் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் சீமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து," மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன் ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது. இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது. ஆனால் இனி - கழிப்பது இயலாது. வாழ்த்துகிறேன்." என கூறியிருந்தார்.
அதற்கு சீமான் நன்றி தெரிவித்து எக்ஸில் பதிவிட்டுள்ளார். அதில்,"பெருமதிப்புமிகு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி..!" என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications