அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக்குங்கள்! விஜய்யை அம்பலப்படுத்துவார்! பிரபலம் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும். அப்போதுதான் சட்டசபையில் விஜய்க்கு எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்புவார் என மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், அன்பு வணக்கம் எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: குதிரை பேர அரசியலுக்கு கிடைத்த தொடர் வெற்றியாகவே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களை பார்க்கிறேன். இந்த இடைத்தேர்தல்களில் அதிமுக, திமுக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!

seeman ntk ambasamudram

இந்த இடைத்தேர்தலுக்காக தாராபுரத்தில் விஜய் மாட்டு வண்டி ஓட்டி, முருங்கைக்காய் எல்லாம் பறித்தும் பெரிய அளவிலான வெற்றி இல்லை. கடந்த பொது தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை குறைவாகவே இருக்கிறது.

பெருமையே கிடையாது

விஜய் சார் இந்த வெற்றிக்கு பெருமைப்பட கூடாது, வெட்கப்பட வேண்டும். குதிரை பேரம் செய்து, அவர்களையே வேட்பாளராக்கி, பிரச்சாரம் செய்து பணத்தை செலவழித்தும் இவ்வளவுதான் ஓட்டு கிடைத்தது. எதிர்க்கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டும்.

அதிமுகவின் கோட்டை

தாராபுரம் அதிமுகவின் கோட்டை. அப்படியிருக்கும் போது அதிமுக வேட்பாளர் பானுமதி தோற்றதற்கு காரணம், அந்த தொகுதியின் அதிமுக, திமுக நிர்வாகிகளை தவெக சரிகட்டிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தனித்தே நின்று அதிமுகவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறார், ஆனால் அந்த வியூகம் பலனை கொடுக்கவில்லை.

அதிமுக+ திமுக

அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள், அவர்களுக்குள் கூட்டணி என்றெல்லாம் விஜய் சொல்லியிருந்தார். ஆனால் அதெல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் பொது வேட்பாளரை போட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். பொது வேட்பாளர் போடாததற்கு வியூகம் சரியில்லை என்றுதான் அர்த்தம்.

தாராபுரம்

தாராபுரத்தில் அதிமுக 3ஆவது இடத்திற்கு போய்விட்டது. மதுராந்தகத்திலும் அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இரு தொகுதிகளிலும் 3ஆவது இடத்திற்கு வரும் என கணிக்கப்பட்ட திமுக 2ஆவது இடத்திற்கு வந்து விட்டது. அப்படியென்றால் என்ன அர்த்தம், அதிமுக- திமுக இடையே கடும் போட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மறைத்துவிட்டு அதிமுக, திமுக கூட்டு என பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சீமான் பொது வேட்பாளர்

இனி அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும். எனவே சீமான் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடம் போய் பேச வேண்டும். நான் சட்டசபை உறுப்பினராக வந்தால் சட்டசபையில் விஜய்யை கேள்வி கேட்பேன், அம்பலப்படுத்துவேன் என கூறி சீமான் கேட்டாலே அந்த தொகுதியில் பொது வேட்பாளராகி அவர் ஜெயித்துவிடலாம். இவ்வாறு கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம்

கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 65,589 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் வி.பி.துரை 55,344 வாக்குகளையும் தவெக வேட்பாளர் ராஜகோபால் 53,611 வாக்குகளையும், நாதக வேட்பாளர் டாக்டர் சிவசங்கரன் 14,906 வாக்குகளையும் பெற்றனர். இந்த தொகுதியும் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படுகிறது. இங்கு இரு முறை மட்டுமே திமுக வென்றுள்ளது. இரண்டு முறையும் ஆவுடையப்பன் வென்றார். ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் இரு முறை மார்க்சிஸ்ட் கட்சியும் வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+