கமல்ஹாசனை பின்பற்றிய சீமான்.. காரைக்குடி தொகுதியை தேர்வு செய்தது ஏன்? இதுதான் நாம் தமிழர் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருப்பதோடு, காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சீமானின் தேர்வுக்கு பின் இன்னும் சில காரணங்கள் உள்ளன. அதனை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இன்னும் 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இம்முறை தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்று வருகிறது.

Seeman

நாதக வேட்பாளர் பட்டியல்

இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாதக சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். 117 ஆண்கள், 117 பெண்கள் என்று இரு பாலினத்தவர்களுக்கு சரிக்கு சமமாக வாய்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களம் காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் போட்டியிட்ட தொகுதிகள்

2016 சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியிலும், 2021ஆம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியிலும் சீமான் போட்டியிட்டார். ஆனால் அந்த இரு தேர்தல்களிலும் சீமான் தோல்வி அடைந்தார். இந்த முறை கட்டாயமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை சட்டசபைக்கு அனுப்பிவிட வேண்டும் என்று அக்கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

காரைக்குடி தொகுதி ஏன்?

இதனால் காரைக்குடி தொகுதியை சீமான் தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் காரைக்குடி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக போட்டியிட வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே அதிக முறை வென்றுள்ளது. இம்முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் பட்சத்தில், மீண்டும் காங்கிரஸ்க்கு ஒதுக்கிடு செய்யப்படலாம்.

காரைக்குடியில் நாதக

அதேபோல் சிட்டிங் எம்எல்ஏவான மாங்குடி மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியிலும் பாஜகவுக்கு காரைக்குடி தொகுதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. லோக்சபா தேர்தலின் போது காரைக்குடி தொகுதியில் மட்டும் நாதக வேட்பாளர் சுமார் 17 சதவிகித வாக்குகளை பெற்றார்.

சீமான் வெல்ல வாய்ப்பு?

இந்த தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர் சமூக வாக்குகள் அதிகம் இருக்கின்றன. அதேபோல் தவெக நிர்வாகி பிரவு தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஆனால் சீமான் முன்பு பிரவுவாக் தாக்கு பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக களம் காண வாய்ப்புகள் இல்லாததால், சீமான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

சீமானின் சொந்த ஊர்

அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் நாதகவுக்கு நல்ல வலிமை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் இளையான்குடி அருகே இருக்கும் அரணையூர் தான் சீமானின் சொந்த ஊராகும். இதற்காக நாதக சார்பிலும் சில கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னரே சீமான் இந்த முடிவை எடுத்திருக்கலாம். கடந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பின்பற்றிய பாணியை சீமான் இம்முறை பின்பற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+