என் தங்கை கோமதி.. இன்னும் பல வெற்றிகளை வாரிக் குவிக்கணும்.. சீமான் வாழ்த்து

வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தங்கை கோமதி.. மென்மேலும் வளர்ந்து இன்னும் பல வெற்றிகளை வாரிக் குவிக்கணும்" என்று வீராங்கணை கோமதி மாரிமுத்துவுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Seeman wishes Gold Medalist Gomathi Marimuthu

இதற்காக கோமதிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கோமதியின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்புதான்.

இருந்தாலும் அவரது குடும்ப சூழலும் பின்னணியும் அனைவருக்குமே வியப்பை தந்துவிட்டது! அடிப்படை வசதியே இல்லாத ஒரு கிராமத்தில், குறிப்பாக மைதானம்கூட இல்லாத ஊரில் பிறந்த கோமதி, இன்று உலக சாதனை படைத்துள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "தங்கை கோமதி, மென்மேலும் வளர்ந்து இன்னும் பல வெற்றிகளை வாரிக்குவிக்கவும், தனது தனித்திறமையின் மூலம் தமிழ் மண்ணிற்குப் பெரும்புகழ் சேர்த்திடவும் தங்கைக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!- சீமான்" என்று பதிவிட்டு பாராட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+