'நாம் தமிழர்' பொதுச் செயலாளராக கயல்விழி நியமனம் தாமதம்? இன்றைய பொதுக் குழு திடீர் ஒத்திவைப்பு!
சென்னை: நாம் தமிழர் கட்சி முன்னர் அறிவித்திருந்த அக்கட்சியின் இன்றைய பொதுக் குழு கூட்டம் மழை, வெள்ள பாதிப்பால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் பதவி வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியில் 2-ம் கட்ட பதவிகளாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பலரே நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறினர் அல்லது நீக்கப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் தடா சந்திரசேகரன். சில மாதங்களுக்கு முன்னர் தடா சந்திரசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார் என அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் தற்போது சீமானின் மனைவி கயல்விழி பங்கேற்று வருகிறார். பொதுச் செயலாளராக இருந்த தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வில் அவர் பங்கேற்றார்; பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கயல்விழி தலைமையில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியில் கயல்விழி முன்னிறுத்தப்படுவதால் அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக கயல்விழி நியமிக்கபடக் கூடும் எனவும் கூறப்பட்டது. இதனை சீமான் தரப்பும் மறுக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு இன்று கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுக் குழுவில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்றைய பொதுக் குழு கூட்டம் மழை. வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழுவுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் தமது வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications