"அக்னி கலசம்".. ஒரே உளறல்தான்.. #சாதி சாக்கடை சீமான்.. ட்விட்டரில் என்ன பிரச்சனையாம்?
சீமானுக்கு எதிராக #சாதி சாக்கடை சீமான் என்று ட்ரெண்டாகி வருகிறது
சென்னை: சீமானுக்கு எதிராக #சாதி சாக்கடை சீமான் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதில் ஏராளமானோர் திரண்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஜெய்பீம் படம் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது.. படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும், சில சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில், பாமக தரப்பு படத்தை கண்டித்து வருகிறது.. படத்தில் நடித்த சூர்யாவுக்கும் மிரட்டல் விடுத்து வருகிறது.

ஜெய்பீம்
எனவேதான், சூர்யாவுக்கு திரை உலகம் சார்பாகவும், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாகவும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டு வருகிறது..இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம், சீமானிடம் ஜெய்பீம் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..

பேட்டி
அதற்கு சீமான், "நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது... அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.. அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்? அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன்" என்றார்.

சூர்யா
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவோம் என்று பாமக நிர்வாகி சொல்லி உள்ளாரே என்று கேட்டதற்கு, "விவாதங்களில் கூட எட்டி உதைத்தால் என்ன தவறு என திரும்ப திரும்ப பேசுகிறார்கள்.. சூர்யா திட்டமிட்டு எதையும் செய்திருக்க மாட்டார். தம்பி சூர்யாவை மிதியுங்கள்.. உதையுங்கள் என்பது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது... அப்படி பதிவு செய்தவரை வேண்டுமானால் உதையுங்கள் நான் வேண்டுமானால் காசு தருகிறேன்" என்றார்.

பேச்சு
சீமானின் இந்த பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு வன்னி அரசு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மநுவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்" என்று சீமானை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

கண்டனம்
இந்நிலையில், சீமானுக்கு எதிராக #சாதி சாக்கடை சீமான் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. "திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிசட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்?" என்று வன்னியரசு கேள்வி எழுப்புகிறார்.
Recommended Video

கருத்துக்கள்
சாப்பாட்டில், தாலியில், உடையில், பேச்சில், சாமியல், திருவிழாவில், கடையில், தெருவில், பண்டிகையில், அரசியலில் இருக்கும் சாதி, சினிமாவில் மட்டும் எப்படி மறையும் சாதி? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சூர்யாவையும் அரவணைச்சு பேசிருக்காரு, பாமகவின் நியாயமான வாதத்தையும் ஆதரிச்சிருக்காரு, ஜெ.குரு அவர்களையும் குறை சொல்லாம கடந்துட்டாரு, சூர்யாவை அடிப்பேன்னு சொன்ன பாமககாரரையும் கண்டிச்சிட்டாரு என்று நடுநிலைவாதிகள் சிலர், இந்த ஹேஷ்டேக்கில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications