திருத்தணி கோயிலில் மாஜி சேகர்பாபுவின் கார் தடுத்து நிறுத்தம்! உடனே அமைச்சர் ரமேஷ் போட்ட ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடிக் கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து விஐபி தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் செக் வைத்து அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன் தினம் ஆடிக் கிருத்திகையையொட்டி இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

sekar babu tirutani temple

அப்போது சேகர்பாபுவின் காரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீஸார் கூறுகையில், சேகர்பாபுவின் கார் மேலே செல்வதற்கு அனுமதி பெறவில்லை. அதற்கான சிறப்பு அனுமதி குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

எனவே அவரது காரை மேலே அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஒரு முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்எல்ஏவாக இருக்கும் சேகர்பாபுவுக்கே இந்த நிலையா என்ற கேள்வி எழுந்தது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் ரமேஷ் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் திரைத்துறை பிரபலங்கள் விஐபிக்கள் கோயிலுக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோயில்களில் புகைப்படம், ரீல்ஸ் மற்றும் மொபைல் போனுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களில், இனிவரும் காலங்களில் பின்வரும் வழிமுறைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. திரைத்துறை பிரபலங்கள் / முக்கியஸ்தர்கள் / VIP தரிசனம்

திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது VIP-க்கள் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே, அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் எனது அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.

2. புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் தடை

திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு VIP-க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் நடைபெற்றதாக செய்திகள் வெளியானால், அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் எவ்வித விதிவிலக்கும் இன்றி, மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ரமேஷ் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+