என்னாது டைரியா?.. அது கற்பனை.. என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி பலிக்காது- சேகர் ரெட்டி
சென்னை: எனக்கு தெய்வ சக்தி இருப்பதால் மனிதர்களின் சூழ்ச்சி பலிக்காது என சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் டைரி எல்லாம் ஒன்றுமே இல்லை, யாரோ வீண் பழி சுமத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு திடீரென ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு அறிவித்த இந்த நடவடிக்கையின் பெயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
அப்போது புதிய ரூ 2000 நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. இந்த நிலையில் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய ரூ 2000 நோட்டுகளை வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

2017 ஆம் ஆண்டு சோதனை
இதையடுத்து சென்னையில் இருக்கும் அவரது வீட்டில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக புதிய ரூ 2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ மொத்தம் ரூ 24 கோடியை கைப்பற்றியது தெரியவந்தது.

வேலூரில் நடத்தப்பட்ட சோதனை
சென்னை, வேலூரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 14 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன. இந்த நிலையில் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது தெரியவந்தது.

12 பேரின் பெயர்கள்
அந்த டைரியில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்சி சம்பத் உள்பட 12 பேரின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த டைரியில் மேற்கண்ட நபர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாகவும் விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை இவர்கள் மறுத்துள்ளனர்.

செந்தில் பாலாஜி
அது போல் முன்னாள் அதிமுக அமைச்சரும் இன்னாள் திமுக அமைச்சருமான செந்தில் பாலாஜியின் பெயரும் இந்த டைரியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். தனது பெயர் டைரியில் இருந்தால் காட்டுங்கள் என செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

தமிழகம்- புதுவை
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு- புதுவை ஆலோசனைக் குழுத் தலைவராக இரண்டாவது முறையாக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். சென்னை தியாகராய நகர் பெருமாள் கோயிலில் பதவியேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சிவப்பு நிற டைரி குறித்து கேட்கப்பட்டது.

மனித சூழ்ச்சி பலிக்காது
அவர் கூறுகையில் அது கற்பனை. யாரோ சிலர் இது போன்று கூறி வருவதால் பிரச்சினை இல்லை. உயர் பதவிகளுக்கு வந்தால் சிக்கல்கள் வருவதும் இயல்புதான். என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி பலிக்காது. எனக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை சேர்க்க வேண்டாம் என்றார் சேகர் ரெட்டி.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications