“எடுத்ததுமே அந்த சகடையை ஏன் கொண்டு வர்றீங்க?”.. எச்.ராஜா பற்றிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு ரிப்ளை
சென்னை: தியேட்டரில் வெளியிடுவதற்கு கூட தகுதி இல்லாத ஒரு படம் 'கந்தன் மலை' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை படத்தில் அறநிலையத்துறையை விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு"வேறு ஏதாவது இருந்தால் கேளுங்கள். எடுத்த உடனேயே அந்த சகடையை ஏன் கொண்டு வருகிறீர்கள்?" எனக் கோபமாகக் கேட்டார் சேகர்பாபு.
வீரக்குமார் என்பவரின் இயக்கத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கந்தன் மலை' திரைப்படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதே பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான காட்சிகளும், வசனமும் இந்த படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்தது. 'கந்தன் மலை' படத்தில் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை படத்தில் அறநிலையத்துறையையும், சேகர்பாபுவையும் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு, "வேறு ஏதாவது இருந்தால் கேளுங்கள். எடுத்த உடனேயே அந்த சகடையை ஏன் கொண்டு வருகிறீர்கள்?" எனக் கேட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தியேட்டரில் வெளியிடுவதற்கு கூட தகுதி இல்லாத ஒரு படத்தில் நடித்த தகுதி இல்லாத ஒருவர்தான் எச். ராஜா. என் அருகில் நின்று கொண்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி என்ன மதம் என்று எனக்கு தெரியாது. கேள்வி கேட்கும் செய்தியாளர்களும் என்ன மதம் என்று எனக்கு தெரியாது. மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் தீய சக்தியின் பணிகள் தமிழகத்தில் எடுபடாது.
4 ஆயிரம் கோயில்கள் குடமுழுக்கு காணப்போகின்றன. 24 கோயில்கள் லிப்டிங் முறையில் தூக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியில் அறநிலையத்துறைக்கு செய்த சாதனைகளை வேறு எந்த ஆட்சியாலும் செய்ய முடியாது. நாளொரு அற்புதங்கள் நிகழ்த்தி இறை அன்பர்களுக்கு மகிழ்ச்சியை தரும் இந்த ஆட்சியை உதவாக்கரை ராஜாக்களால் எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications