என்னா சொல்றது.. ஆஹான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்போனில் பேசிய சேகர் பாபு! எதிர்முனையில் எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று கூறிய நிலையில் அதிமுக கொறடா அக்ரீ கிருஷ்ணமூர்த்தியின் செல்போனில் சேகர்பாபு பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதம் ஆகி உள்ளது. ஏற்கனவே அதிமுக திமுக கூட்டணி அமைக்க திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில். அதிமுக எம்எல்ஏவின் செல்போனில் திமுக எம்எல்ஏ யாருடன் பேசினார்? அவர் எடப்பாடி பழனிசாமி? என சமூக வலைதளங்களில் விவாதம் வெடித்துள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார் விஜய். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விஜய் அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sekarbabu

6ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு பிறகு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும் அதற்கு பிறகு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெற்றது.

தமிழக சட்டசபை

பின்னர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருவதோடு முக்கிய திட்டங்களை அறிவித்தும் வருகின்றனர். அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மானிய கோரிக்கை

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. இன்றைய தினம் மதுவிலக்கு, சமூக நலன், வேளாண்மை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக 9.30 மணிக்கு சட்டசபை கூறிய போது திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவைக்கு வரத் தொடங்கினர்.

Sekarbabu

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

குறிப்பாக அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சேகர்பாபு ஒன்றாக நடந்து வந்தனர். எல்லாவற்றையும் விட அக்ரி கிருஷ்ணமூர்த்தி யாருடன் போனில் பேசிக் கொண்டே வந்தபோது திடீரென அந்த போனை வாங்கி சேகர்பாபு பேசினார். சுமார் 2 நிமிடம் அவர் செல்போனில் பேசியதாக சொல்லப்படுகிறது.

சேகர்பாபு

அதிமுகவும் திமுகவும் பரம எதிரியாக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுக எம்எல்ஏவின் செல்போனை வாங்கி சேகர்பாபு யாருடன் பேசினார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.ஒரு சிலர் அவர் எடப்பாடி பழனிசாமி தான் என சொல்லி வருகின்றனர். அதற்கு காரணமாக சில பாயிண்டுகளை முன்வைக்கின்றனர் நெட்டிசன்கள். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக திமுக வெற்றி வாய்ப்பை பெறாத நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

எடப்பாடி பழனிச்சாமி

அப்போது திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும், வெளியில் இருந்து ஆதரவு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்ற சில ஆஃபர்களை திமுக கொடுத்ததாக சொல்லப்பட்டது. அதற்கு எதிராகத்தான் சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கியதோடு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

விஜய் அரசு

அப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் புகார் அளித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வரும் நிலையில் அவரை சட்டசபை அதிமுக கொறடாவாக எடப்பாடி பழனிச்சாமி நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய் அரசு மீதும் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்து வம் நிலையில் தற்போது அவரது செல்போனில் சேகர் பாபு பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக - திமுக

மற்றொருபுறம் அதிமுகவும் திமுகவும் கூட்டணியாக சேர்ந்து கொண்டு சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்தை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். அது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+