காலால் செல்ஃபி.. கலக்கலான ஓவியம்.. ரஜினிகாந்த்துடன் பிரணவ் நெகிழ்ச்சி சந்திப்பு
சென்னை: பிரணவ் ஞாபகம் இருக்கிறதா? கேரளாவில் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்து, கால்களால் செல்ஃபி எடுத்தாரே அதே பிரணவ்தான்.
பினராயி விஜயனுடன் அவர் அப்படி எடுத்த செஃல்பி, லெக்ஃபி என்றும் அழைக்கப்பட்டு, நாடு முழுவதும் வைரலானது. பிறவியிலேயே பிரணவுக்கு கைகள் இல்லை. எனினும், தனது கால்களை பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் பல சாதனைகளை படைத்து வருகிறார். படம் வரைவது, போனை ஆபரேட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை அசத்தலாக செய்து வருகிறார்.

சாதாரண மனிதர்கள் செய்வதைவிடவும், நிறைய வேலைகளை அநாயாசமாக இவர் செய்கிறார். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரையும் இவர் சந்தித்தார். பிரணவுக்கு ஒரு ஆசை இருந்தது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான், அந்த ஆசை.
இதுகுறித்த தகவலை அறிந்த ரஜினிகாந்த், பிரணவுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை போயஸ் இல்லத்திற்கே வரவழைத்துள்ளார். இன்று மாலை ரஜினிகாந்த்தை பிரணவ் மற்றும் அவர் பெற்றோர், ரஜினிகாந்த்தை சந்தித்னர்.

சுமார் அரை மணி நேரம், பிரணவிடம் பேசிக்கொண்டு இருந்தார் ரஜினிகாந்த். இதன்பிறகு தனது டிரேட் மார்க் லெக்ஃபி போட்டோவை எடுத்துள்ளார் பிரணவ். மேலும், தான் வரைந்த ரஜினிகாந்த் ஓவியத்தையும், பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறி தனது தொலைபேசி எண்ணையும் பிரணவுக்கு வழங்கினாராம் ரஜினிகாந்த்
-
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications