பழைய தங்கத்தை விற்க போறீங்களா? பணமாக வாங்குவதா, நகையாக மாற்றுவதா? எது லாபம்? செய்கூலியில் இது கவனம்
சென்னை: தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது.. காலங்காலமாக சேர்த்து வைத்த பழைய தங்கத்தை விற்கவோ அல்லது புதிய மாடலுக்கு மாற்றவோ நினைக்கும் போது, பலருக்கும் எழும் குழப்பம் அதை பணமாகப் பெறுவதா அல்லது புதிய நகையாக மாற்றுவதா என்பதுதான்.. எதில் லாபம்? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
இந்திய குடும்பங்களில் சுப நிகழ்வுகளின்போது பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்கும் வழக்கம் அதிகமாகவே உள்ளது.. ஆனால், இந்த செயல்முறையில் லாபம் எது என்பதைத் தீர்மானிப்பதில் சில முக்கிய நுணுக்கங்கள் ஒளிந்துள்ளன..

பழைய தங்கம் விற்பனை
முதலாவதாக, நீங்கள் பழைய தங்கத்தை விற்கச் செல்லும்போது அதன் தூய்மையை உறுதி செய்வது மிகவும் அவசியம்.. பழைய நகைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லையெனில், அதன் தரத்தை உரசிப் பார்த்து தான் மதிப்பீடு செய்வார்கள்..
நீங்கள் பழைய நகையை கொடுத்துவிட்டு பணமாக பெற விரும்பினால், அன்றைய சந்தை விலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கழித்து கொள்வார்கள்.. உருகும்போது ஏற்படும் சேதாரம் மற்றும் உருக்குக் கட்டணம் போன்றவற்றைக் கழித்த பிறகுதான் உங்களுக்கான தொகை தீர்மானிக்கப்படும்.. எனவே, அவசர பணத் தேவை இருந்தால் மட்டுமே நகையை விற்றுப் பணமாகப் பெறுவது சிறந்தது..
தங்க நகைகள்
அடுத்ததாக, பழைய தங்கத்தை புதிய நகையாக மாற்றும் போது லாபத்தைக் கணக்கிடுவது சற்று சிக்கலானது.. பெரும்பாலான நகைக்கடைகளில் பழைய தங்கத்தை மாற்றும் போது, அதற்கு அதிக மதிப்பைக் கொடுப்பார்கள்.. அதாவது, பணமாக வாங்குவதை விட நகையாக மாற்றும் போது சில கடைகளில் ஒரு கிராமுக்கு கூடுதல் விலை வழங்கப்படலாம்..
இருந்தாலும், புதிய நகையை வாங்கும் போது அதில் செய்கூலி, சேதாரம் போன்றவற்றில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.. நீங்கள் கொடுக்கும் பழைய தங்கத்திற்கு முழு மதிப்பு கிடைத்தாலும், புதிய நகையின் செய்கூலி அதிகமாக இருந்தால் உங்கள் லாபம் குறைந்துவிடும்..
செய்கூலி, சேதாரம் தள்ளுபடி
குறிப்பாக, நீங்கள் கொடுக்கும் பழைய தங்கம் 22 கேரட் என்றால், அதே அளவு எடையுள்ள புதிய நகையாக மாற்றும் போது சில கடைகளில் செய்கூலி மற்றும் சேதாரத்தைத் தள்ளுபடி செய்யலாம்..
பண்டிகைக் காலங்களில் இத்தகைய சலுகைகள் அதிகம் கிடைக்கும்.. சில கடைகளில் 0% சேதாரம் போன்ற சலுகைகளும் வழங்கப்படலாம்.. ஆனால், சிக்கலான வேலைப்பாடுகள் கொண்ட நகைகளைத் தேர்ந்தெடுக்கும் போது சேதாரம் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூட செல்லலாம்..
புதிய ஆபரணங்கள்
இது உங்கள் கையில் இருந்து கூடுதல் பணத்தைச் செலவழிக்க வைக்கும்.. எனவே, குறைந்த சேதாரம் உள்ள எளிய வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பது உங்கள் பழைய தங்கத்தின் மதிப்பைப் பாதுகாக்கும்..
மொத்தத்தில், பழைய தங்கம் உங்கள் முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. பணத் தேவை மிகக் கட்டாயமாக இருந்தால் மட்டுமே விற்க வேண்டும்.. இல்லையெனில், செய்கூலி மற்றும் சேதாரம் குறைவாக உள்ள புதிய ஆபரணங்களாக மாற்றுவதே நீண்ட கால அடிப்படையில் லாபகரமானது.. எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் இரண்டு அல்லது மூன்று கடைகளில் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்..!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications