பழைய வாகனம் வாங்குறீங்களா..உடனே இதை செய்யுங்க.. இல்லாட்டி சிக்கல்.. சென்னை போலீஸ் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய வாகனத்தை வாங்கும் போது கண்டிப்பாக ஆர்சி புக்கில் பெயரை மாற்றுவது கட்டாயம். ஆர்சி புக்கில் பெயரை மாற்றாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறை பிடிப்பட்டால் 500 ரூபாயும், இரண்டாவது முறை என்றால் 1500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படுகிறது. எனவே வாகன பெயர் மாற்றத்தை கண்டிப்பாக செய்யுங்கள்.

புதிய வாகனம் வாங்கும் போது அந்த வாகனத்தின் பெயர் உங்களுடையதாகவே இருக்கும். ஆனால் பழைய வாகனத்தை வாங்கினால் அதில் உங்கள் பெயர் இருக்காது.அதற்கு என்ஓசி வாங்கி இருப்பீர்கள். அதை வைத்து நீங்கள் உங்கள் பெயரில் வாகனத்தின் பெயரை மாற்றுங்கள்

 Selling or buying used vehicle? Chennai police shares Useful to you or persons

பழைய வாகனத்தை வாங்கும் முன்பு அந்த வாகனத்தின் பதிவு அபராதங்கள் எவ்வளவு இதுவரை உள்ளது என்பதை பரிவான் இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். எந்த அபராதமும் இல்லை என்பதை உறுதி செய்து தான் வாங்க வேண்டும். அதேபோல் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எவ்வளவு காலம் எடுக்காமல் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இன்சூரன்ஸ் கரண்ட்டில் இருக்க வேண்டும். வாகனத்தின் பெயரில் கடன் ஏதாவது வாங்கி கட்டாமல் வைத்திருக்கிறாரா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.. வாகனம் உண்மையில் அவருடையது தானா அல்லது வேறு ஒருவரின் வாகனத்தை பெயர் மாற்றாமல் அவர் ஓட்டிக்கொண்டிருக்கிறாரா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு மெக்கானிக்கை கூட்டிவந்து வாங்க உள்ள வாகனத்தின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். வாகனத்தின் அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ்களும் சரியாக உள்ளனவா? வாகனத்தின் என்ஜின் எப்படி என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், வாகனம் தரமாக இருக்கிறது. ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது உறுதியானால் மட்டுமே வாங்க வேண்டும்.

பழைய வாகனத்தை வாங்கினால் என்ஓசி கொடுப்பார்கள். அதைவைத்து உடனே வாகனத்தின் உரிமையாளராக உங்கள் பெயரை மாற்றிவிடுங்கள். உங்கள் வாகனத்தின் பெயரை எப்படி மாற்றுவது என்பதை பார்ப்போம். முதலில் நீங்கள் Parivahan வெப்சைட்டிற்கு செல்லுங்கள். உள்ளே என்டர் vehicle registration நம்பர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதில் உங்களுடைய வண்டியின் நம்பரை போடுங்கள். அதை நீங்கள் தேர்வு செய்த உடன் அந்த வண்டி எந்த RTO கீழ் வருகிறது என்பதை காண்பிக்கும். பிறகு Proceed option யை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் Transfer of ownership option யை தேர்வு செய்யுங்கள்.
பின்னர் Registration நம்பர் மற்றும் Chassis number என்டர் செய்ய வேண்டும். அதில் வண்டியின் Details அனைத்தும் காண்பிக்கும்

அதில் இன்சூரன்ஸ் செய்ய பட்டுவிட்டதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை இன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வது முடியாது. இன்சூரன்ஸ் செய்த பின்னர் தான் பரிவான் தளத்திற்கே போக வேண்டும்.எல்லாம் முடிந்த பின்னர் யார் பெயருக்கு மாற்ற போகிறீர்களோ அந்த பெயர் மற்றும் முகவரி மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.

கட்டணமாக 350 லிருந்து 500 வரையும் செலுத்த ஆன்லைனில் ஆப்சன் காண்பிக்கும். இந்த தொகை நீங்கள் வாங்கும் வாகனத்தை பொறுத்து மாறுபடும். Form 29 மற்றும் போரம் 30 ஐ Fill Up செய்து உங்கள் ஊரில் உள்ள RTO விடம் அளிக்க வேண்டும். அந்த form 29 மற்றும் Form 30 இரண்டுமே நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே உங்களுக்கு காட்டும். அதைத்தான் ஆர்டிஓவிடம் அளிக்க வேண்டும். இதன்பின்னர் வாகனம் உங்கள் பெயருக்கும் மாறிவிடும்.

வாகனத்தை வாங்கினால் மட்டுமல்ல, வாகனத்தின் உரிமையாளர் இறந்தாலும், வாரிசுகள் பெயரில் உரிமை மாற்றம் செய்ய வேண்டும். ஒருவர் இறந்த 3 மாதத்தில் வாகனத்தின் பெயரை மாற்ற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் முதல்முறை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறை என்றால் 1500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+