Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது லிஸ்ட்லயே இல்லயே.. கனிமொழியை பாராட்டிய செல்லூர் ராஜூ.. ஆட்டம் காணும் மதுரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அதிமுகவில் உள்ள பல சீனியர்கள், திமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள மேலும் சில நிர்வாகிகளை தவெகவில் இணைக்க போவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்நிலையில் செல்லூர் ராஜூ, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை பாராட்டி பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளன. மதுரை மாநகராட்சி ஊழல், திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவற்றால் மதுரை அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. திமுக, அதிமுக பரஸ்பரம் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன.

sellur-raju-praised-kanimozhi-over-tuticorin-airport

மதுரை மாநகராட்சி ஊழல்

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுக மட்டுமே. மக்களின் பிரச்சனையை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இந்த நிர்வாகம் வந்ததில் இருந்து மாநகராட்சியில் வரி மேல் வரி விதிக்கிறார்கள்.

வீட்டுக்கு வரைபட அனுமதி வாங்கி விட்டு மண்டபம் கட்டுகிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, குப்பை வரி என்று என்னென்ன வரி போட வேண்டுமோ போட்டுவிட்டார்கள். இவ்வளவு வரி விதித்தால் மக்களுக்கு கட்ட வசதியில்லை. இதற்கு நடுவே பக்கத்து ஊராட்சிகளை எல்லாம் மாநகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடுகிறார்கள். இருப்பவன் கூழ் குடிப்பதற்கே வழி இல்லை. இதில் அடுத்தவனை சேர்க்கிறார்கள்.

மக்கள் அவதி

அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையாக எப்படி வசதிகள் செய்யும். இதெல்லாம் ரொம்பம் வருத்தமளிக்கிறது. மதுரையில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெறுகிறது. நிர்வாகம் மோசமாக உள்ளது. அரசு மேலிடம் இதை கண்டு கொள்வதே இல்லை. மேயர், மண்டல தலைவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மேயர் இல்லாமல் மதுரை மாநகராட்சி ஸ்தம்பித்துள்ளது. இதனால் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறுவதில்லை. அமைச்சர் தலைமையில் தான் நிர்வாகம் உள்ளது.

எம்எல்ஏ தொகுதி நிதியை பயன்படுத்தவே மாநகராட்சியிடம் போராட வேண்டியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மதுரை மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள். இப்போது திறக்கப்பட்ட மேம்பாலம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையில் ஜல்லிக்கட்டு மைதானம் தேவையா. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். இதைக்கண்டித்து டிசம்பர் 17 ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கனிமொழிக்கு பாராட்டு

தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையத்திற்கு பிறகு மதுரை விமான நிலையம் தான் உருவனாது. ஆனால் மதுரை விமான நிலையம் தற்போதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியாக உள்ள தொகுதி என்பதால் தான், தூத்துக்குடி விமான நிலையம் விரைவாக விரிவாக்கம் செய்யப்பட்டது." என்றார். கனிமொழியை செல்லூர் ராஜூ பாராட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+