பாஜகவை விட்டு வெளியேறுவது எப்போ? சிரித்துக்கொண்டே பதில் சொன்ன செல்லூர் ராஜூ! கோமாளி என்றும் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக கூட்டணியை விட்டு எப்போது வெளியேறப் போகிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு பதில் அளித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது முதலே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. எனினும், இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியது அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்க, கூட்டணி பற்றி எல்லாம் மேலே உள்ள தலைவர்கள் எடுக்கும் முடிவு தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

Sellur raju reply to the question when did you going to leave bjp alliance

இந்நிலையில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்துப் போயுள்ளது. ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசியிருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சிவி சண்முகம் உள்ளிட்டோர் காட்டமாக பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர் பதவி என்பது ஒரு பொம்மையை போன்றது. பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ராஜாவாகவும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்" எனத் தெரிவித்தார்.

அப்போது, பாஜக கூட்டணியை விட்டு எப்போது வெளியேறப் போகிறீர்கள்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு பதில் அளித்த செல்லூர் ராஜூ, "இப்போ கூட்டத்தை முடிச்சிட்டு வந்தபிறகு பேசுவோம்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+