எத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரவே வராது.. அமைச்சர் செல்லூர் ராஜூ!
சென்னை: எத்தனை தை மாதம் பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. ஸ்டாலின் கனவு பலிக்காது என மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ராயபுரத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் தை பிறந்தால் வழி பிறக்கும். அதிமுக ஆட்சி முடிவடைய நேரம் வந்துவிட்டது என்றார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் செயல்பாடுகளையும் ஆளுமையை பற்றியும்தான் சொல்லுவோம். எங்களது கட்சி ஆட்சிக்கு வருவதை பற்றி விவாதித்தோம்.

ஸ்டாலின்
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். ஸ்டாலின் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியுமா என்று கேட்டார் பொது குழு கூட்டி காட்டியுள்ளோம். ஒவ்வொரு தையும் பிறந்தவுடன் எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது வழக்கம் ஆனால் எத்தனை பிறந்தாலும் அவருக்கு திமுகவிற்கு நல்வழி பிறக்காது.

தமிழர்கள்
இலங்கைக்கு சென்று ஈழத்தில் இறந்த தமிழர்களை பார்க்க போகிறோம் என்று சொல்லிவிட்டு ராஜபக்சே பரிசு வாங்கி வந்து விட்டுச் சென்ற திமுகவிடம் கேளுங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

அச்சம்
போர் குற்றவாளி முன்னால் இலங்கையின் பிரதமரை அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் திமுக ராஜபக்சே கொடுத்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி விட்டது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்ற நாங்கள் தயாராக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். மக்கள்தான் எஜமானர்கள் நிச்சயமாக மக்கள் எங்களை ஆதரிப்பார் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை.

திமுக காலம்
திமுக காலத்தில் தான் பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருந்துவந்தது அதிமுக காலத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications