செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சூப்பர் வசதிகள்.. சுகன்யா சம்ரிதி யோஜனாவில் வரிச்சலுகை பெற முடியுமா?
சென்னை: செல்வ மகள் திட்டத்தின்கீழ் யார் யார் வரிச்சலுகைகளை பெறலாம்? 70 லட்சம் பெறுவதற்கான கணக்கீடு கொண்டிருந்தால் அதற்கான முதிர்வு தொகை என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான அருமையான சேமிப்பு திட்டம் ஆகும்... வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த செல்வமகள் கணக்கை தாராளமாக துவங்கலாம்.

சேமிப்பு கணக்கு: மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.. ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம்.. அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும்
பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும்.
பெண் குழந்தைகள்: இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு. பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம். குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாகும்.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் மட்டும் நம்முடைய தமிழ்நாட்டில் 32.57 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அகில இந்திய அளவில் 2வது இடத்தை இந்த திட்டம் பிடித்திருக்கிறது. முதலீடு மற்றும் வட்டிக்கு 100% பாதுகாப்பு என்பதுடன், அதிக வட்டி கிடைக்கிறது என்பதால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை இந்த செல்வமகள் திட்டம் பெற்றுவருகிறது.
வருமானம்: உங்கள் மகளுக்கு ரூ.70 லட்சம் கார்பஸ் தொகையை நீங்கள் இலக்காக வைத்திருக்கிறீர்கள் என்றால், மாதம் ரூ.12,500 அல்லது ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும்... அப்படியானால் 15 வருடங்களில் உங்கள் மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும்.. 8.20 சதவீத வட்டி விகிதத்தில் உங்களுக்கு ரூ.46,77,578 வருமானமும் கிடைக்கும்.. மொத்தத்தில் முதிர்ச்சியின்போது, ரூ.69,27,578 அதாவது கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் நீங்கள் பெறுவீர்கள்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.. எனவே, இதில் கணவன்,மனைவி இருவரில் ஒருவர் இந்த முதலீட்டுக்கான வரிச்சலுகையை பெற முடியும். காரணம், மனைவி தன்னுடைய வங்கி கணக்கு மூலமாக குழந்தையின் பெயரில் செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்தால், அந்த முதலீட்டுக்கான வரி சலுகையை கணவன், மனைவி என 2 பேரில் யார் வேண்டுமானாலும் பெறலாம்
வரிவிலக்கு: செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் வரி விலக்கு பெறலாம்... குழந்தையின் தந்தை கணக்கை திறந்தாலும், தாய் (பெற்றோர்) திட்டத்தில் பங்களித்தால் சுகன்யா சம்ரிதி யோஜனா வரிச் சலுகைகளைப் பெறலாம். ஆனால், குழந்தையின் தாத்தா பாட்டி திட்டத்தில் முதலீடு செய்தாலும், அவர்கள் வரிச் சலுகையைப் பெற முடியாது..
அதுமட்டுமல்லாமல், முதலீடு செய்யப்படும் தொகையானது, முதலீட்டின் மீது கிடைக்கும் வட்டி, முதிர்வு தொகை என அனைத்துக்குமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வரி விலக்கு உண்டு.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications