உடனே களம் வந்த காங்கிரஸ்.. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக நாளையே கோவையில் செல்வப்பெருந்தகை போராட்டம்
சென்னை: கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவை, கொடிசியாவில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசுகையில், "ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது." என்று கூறினார்.

அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது அவர், "பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். காதால் கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவரின் பாணியில் அவர் பேசியிருக்கிறார்.
கடந்த ஓராண்டாக ஒவ்வொரு உணவு வகைக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களின் குழு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரியவர் ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா சீனிவாசனும் இருக்கிறார்.
அப்போது, அவர் நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். இதைத்தொடர்ந்து, அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா சீனிவாசனும் இருக்கிறார். அப்போது, அவர் நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் நிர்மலா சீதாராமனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டியும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் எனது தலைமையில் கோயம்புத்தூர், காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஹோட்டல் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை செப்டம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மிகவும் மந்தமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் உண்டு. ஆனால் கோவை அன்னபூர்ணா விவகாரத்தில் உள்ளூர் ஜோதிமணி தொடங்கி, தேசிய தலைவர் ராகுல் காந்தி வரை சூட்டோடு சூடாக பாஜகவுக்கு கண்டனங்களை பதிவு செய்தனர். அட நம்ம நெட்பிளிக்ஸ் புகழ், கார்த்தி சிதம்பரம் கூட இந்த விஷயத்துல, கம்பு சுத்திட்டாரே. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.
அண்ணாமலை டேமேஜ் கன்ட்ரோல் மெசேஜ் அனுப்பும் முன்பே அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் கொட்டித் தீர்த்து விட்டனர். இதோ இப்போது, கோவை மாநகரத்தில் போராட்டக் களத்தில் குதித்து விட்டது காங்கிரஸ். திமுகவைவிடவும் இந்த விஷயத்தில், காங்கிரஸ் படு வேகமாக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.












Click it and Unblock the Notifications