ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாத கட்சியுடன் எதற்கு கூட்டணி? செல்வப்பெருந்தகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெகவினர் கூறி வருகிறார்கள். தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இதே கருத்தினை சொல்லி வரும் நிலையில் தவெகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு இது எரிச்சலை கொடுத்துள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரசினர் பார்த்து வரும் நிலையில், விஜய்யை தவெகவினர் முன்னிறுத்துவது காங்கிரஸ் தலைவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Selvaperunthagai asks Why form an alliance with a party that cannot accept Rahul Gandhi as the PM candidate

கூட்டணி எதற்கு?

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எதற்கு கூட்டணி? என கேள்வி எழுப்பியுள்ளார். செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

ஒரு ஐந்தாண்டுகள் திட்டமோ.. ஒரு எதிர்காலத் திட்டமோ.. அனைத்து கட்சி மக்களை, தலைவர்களை அழைத்து எந்த பகுதியில் ஒரு திட்டம் வருகிறதோ, அந்த பகுதிக்கு சென்று அந்த மக்களிடம் ஆலோசனை பெற வேண்டும். எப்படி பரந்தூர் விமான நிலையத் திட்டத்தினை வேண்டாம் என்று சொன்னாரோ அதே போல் செய்ய வேண்டும். பரந்தூருக்கு சென்று மக்களை சந்தித்தார். மக்கள் வேண்டாம் என்றதும் அந்த திட்டத்து ரத்து செய்துவிட்டார்.

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்

அதே மாதிரி இந்த மக்கள் கிட்ட ஏன் கருத்து கேட்கவில்லை. கருத்து கேட்டிருக்க வேண்டும் அல்லவா.. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் ஒரு ஆளுமையுடன் குரல் கொடுக்கிறார்கள். அதே போன்று எல்லா கூட்டணி கட்சிகளும், மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தான் தலைவர் ராமசாமி படையாச்சியார் பிறந்தாளில் பதிவு செய்கிறேன். அதே போன்று தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் என்றால், அவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் இதில் கூட்டணி வைப்பதற்கு என்ன வாய்ப்பு இருக்கு..

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று இன்றைய ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளில் சபதம் ஏற்போம். ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக்கொள்பவர்களுடன் கூட்டணி வைப்பது தான் நேர்மை" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+