விஜய் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட காங்கிரஸ்.. ஆசையாக இருந்தாரே.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்த டெல்லி
சென்னை: கடந்த 2 நாட்களாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. தவெக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை கொடுக்க முன் வந்ததாக செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் தவெக விஜய் முன்வந்ததாக செய்திகள் வந்தன.
ஆனால் 70 சீட்-துணை முதல்வர் பதவி என்பது தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்ட செய்தி என்று கூறப்படுகிறது. தவெக மாநாடு நிறைய எதிர்வினை விமர்சனங்களை சந்தித்ததால், விஜயின் "அங்கிள்" பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால், இந்த செய்தியை தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்டார் என்று கூறப்படுகிறது.

விஜய் விமர்சனம்
விஜய் - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொய்யான செய்திகள் வெளியான நிலையில்தான் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை பேசி உள்ளார். அதில், நடிகர் விஜய் மேடையில் கண்ணியமாகப் பேச வேண்டும். விஜயகாந்த் கட்சி தொடங்கி கணிசமான வாக்குகளைப் பெற்றார். 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சியின் இப்போதைய நிலை என்ன? விஜய் கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும்.
இதுபோல பல கட்சிகள் வரும், போகும். காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் கொள்கை பலம்தான். காங்கிரஸ் யானை பலம் கொண்ட கட்சி. எங்கள் அரசியல் எதிரிகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவாக இருந்தாலும், நாங்கள் அவர்களை நாகரிகமான முறையில் பேசுகிறோம். விஜய் அது போல நாகரீகமாக பேச வேண்டும். நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்க ஏற்பாடு செய்த மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். முடிவில், காங்கிரஸ் கூட அந்தக் கட்சியில் இணைந்தது. ஆனால் தற்போது அந்தக் கட்சி இல்லை.
தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும். தற்போது, பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒரே கட்சியாக இது உள்ளது. சில கட்சிகள் பாரதிய ஜனதாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் நாங்கள் பலமான கூட்டணியாக உள்ளோம். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குகளைப் பெறும். பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது, என்று செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
காங்கிரஸ் - தவெக விஜய் மீட்டிங்
முன்னதாக காங்கிரஸ் - விஜய் பேச்சுவார்த்தை என்று தவெக சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பிவிட்ட செய்தியை காங்கிரஸ் - திமுக வட்டாரங்கள் மறுக்கிறார்கள். முக்கியமாக சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் விஜயை சந்திக்க ராகுல் காந்தி தரப்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
விஜயின் இந்த முயற்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவது குறித்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்கள் கட்சி மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அவ்வாறு நேரம் ஒதுக்கினால் அது தவறான சமிக்ஞையை அளிக்கும் என்பதால் ராகுல் காந்தி விஜயைச் சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிய கட்சிகள்கூட விஜயுடன் கூட்டணி வைக்கத் தயங்கும் நிலையில், காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சி விஜயைச் சந்திப்பது சரியானதல்ல என்று ராகுல் காந்தி - சோனியா காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது.
-
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications