ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! ஸ்டாலினை பாராட்டும் செல்வப்பெருந்தகை!
சென்னை: உலகத்தரம் மிக்க, பிரம்மாண்டமான நூலகத்தை மதுரையில் கட்டியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் -பாராட்டும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை. கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படுவது பற்றி செல்வப்பெருந்தகை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாவது;
''ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று பழமொழி ஒன்று இருக்கிறது. மேலும் ஒரு நல்ல சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. நூலகங்களே நல்ல சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது.

மனித வாழ்வின் மாண்பு எனப்படுவது. நல்லவற்றை கற்றலும் அதன்படி நிற்றலுமே ஆகும். நல்ல பயனுள்ள நூல்களை கற்பதானது மனிதர்கள் தவறிழைக்காது அவர்கள் வாழும் வகையறிய செய்வதாக அமையும். மக்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதில் பெரும் பங்கு இருக்கிறது. இதனால் தான் எமது முன்னோர்கள் நாட்டில் கல்விசாலைகள், நூலகங்கள் போன்றனவற்றை அமைத்தனர்.
மனிதர்களின் அறிவு மிகச்சிறந்த பலமான ஆயுதம் ஆகும். இதனால் தான் பண்டை தமிழர்கள் அறிவை வளர்க்க பல பணிகளை ஆற்றினர். அவ்வகையில்தான் கல்வியையும், நூலகங்களையும் அமைத்தார்கள். ஒவ்வொரு நாடுகளினுடைய பெருமையும் சிறப்பும் அந்த நாட்டு மக்களுடைய கல்வி அறிவிலேயே தங்கியுள்ளது.
அந்தக் கல்வியறிவை வளர்ப்பதற்கு இன்று (15.07.2023) முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் உலகத்தரம் மிக்க, பிரமாண்டமான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications